அமிர்தாவை தேடி பாக்யா வீட்டுக்கு வந்த கணேஷ்… கோபி கொடுத்த ஷாக் : இது எங்க போய் முடியுமோ!
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், அடுத்து வரும் எபிசோடுகளுக்கான ப்ரமோ தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இல்லத்தரசி ஒருவரின் வாழ்க்கை போராட்டத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் பாக்யாவை பிரிந்து ராதிகாவை திருமணம் செய்துகொண்ட கோபி, பாக்யாவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார்.
இந்த பக்கம் பாக்யாவின் மூத்த மகன் செழியன் மாலினியிடம் பழகி ஜெனியிடம் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படுகிறார். இந்த பிரச்சனை இன்னும் தீராத நிலையில், எழில் திருமணம் செய்து அமிர்தாவின் முதல் கணவன் சாகவில்லை உயிருடன் தான் இருக்கிறான். என்று கதையை திருப்பி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.
தனது 2 மகன்களும் பிரச்சனையில் சிக்கியுள்ளதால் பாக்யா அடுத்து என்ன முடிவு எடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம் இன்னும் இனியாவுக்கு மட்டும் தான் பிரச்சனை வரவில்லை. அவளுக்கும் ஏதாவது பிரச்சனை செய்யுங்கள் என்றும், அமிர்தாவின் முதல் கணவன் தேவையில்லாத ஆணி என்றும், ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஆனாலும் தற்போது அமிர்தாவை சந்தித்துள்ள அவளது முதல் கணவன் கணேஷ் அடுத்து என்ன பண்ணுவானோ தெரியவில்லை என்ற பதற்றம் இருந்தாலும், கணேஷை பார்த்த அமிர்தா பயத்தில் எழிலின் பின்னால் ஒளிந்துகொள்கிறார். இதன்பிறகு கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனிடையே பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்து வரும் எபிசோடுகளுக்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில், அமிர்தாவை தேடி பாக்யா வீட்டுக்கு வரும் கணேஷ், அமிர்தா நீ ஏன் இங்க இருக்க வா நம்ம வீட்டுக்கு போகலாம் என்று சொல்ல, அவள் பாக்யாவின் பின் சென்று ஒளிந்துகொள்கிறாள். இதை பார்த்து கணேஷ் ஷாக் ஆகிறார்.
அதன்பிறகு கணேஷ் தனது பெற்றோரிடம் அம்மா அமிர்தா ஏன் இப்பா பண்றா என்று கேட்க, அவள் எழிலின் பின்னால் சென்று ஒளிந்துகொள்கிறாள். அப்போது எழில் அருகில் செல்லும் கணேஷை கோபி தடுத்து நிறுத்தி அமிர்தா இப்போ என் மகனின் வைஃப் என்று சொல்ல, பாக்யா அதிர்ச்சியாக பார்க்கிறார். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.