தங்கம் போல ஜொலி ஜொலிக்க வைக்கும் Tomato Face Pack

சுட்டெரிக்கும் வெயிலில் திரியும் போது சருமம் மிகவும் மோசமாக கருமை அடைகின்றது. இந்த கருமையை போக்க பல வழிகளில் இரசாயன அழகுப்பொருட்களை பாவனை செய்கின்றோம்.

இதை அனைத்தையும் தவிர்த்து வீட்டில் உள்ள சில சில பொருட்களை வைத்து நாம் நமது அழகை மெருகூட்டலாம்.

அந்த வகையில் தக்காளியை வைத்து ஃபேஸ் மாஸ்க் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தக்காளி ஃபேஸ் மாஸ்க்
1. தக்காளியை எடுத்து அதில் ஓட்ஸ் தயிர் சேர்த்து மிக்ஸ் செய்து அந்த கலவையை முகத்தில் கருமையாக இருக்கும் இடங்களில் தடவவும்.

20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விட்டு அதன் பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும், இதை வாரத்திற்கு மூன்று முறை செய்தால் கருமை காணாமல் போய் விடும்.

2. தக்காளியையும் முல்தானி மெட்டியையும் சேர்த்து கெட்டியாக கலக்கி 15 நிமிடங்களுக்கு அப்படியே விடுங்கள்.

இதை தடவிய பிறகு அதிகம் பேசக் கூடாது, முக அசைவுகள் கூடாது. ஏனெனில் அது சுருக்கங்களுக்கு வழிவகுக்கும். 15 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவி விட்டால் முகக்கருமை நீங்கும்.

3. தக்காளி மற்றும் பாலை நன்றாக மிக்ஸ் செய்து நன்றாக முகம் மற்றும் கழுத்தில் தடவி ஐந்து நிமிடங்களுக்கு முகத்தில் அப்படியே விட்டுவிட்டு தண்ணீரில் கழுவவும்.

எலுமிச்சை சாறுடன் தக்காளி ஜூஸ் சேர்த்து முகத்தில் தடவவும் முகத்தில் இவை நன்கு ஊறிய பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

இது போன்ற வீட்டில் இருக்கும் டிப்ஸ்களை செய்தால் சரும பாதிப்பு குறையும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *