கமல்ஹாசனுக்கு பேரனாக நடித்துள்ளவர் இப்போது முன்னணி நடிகர்! யாரென்று தெரிகிறதா?
தற்போது முன்னணி தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ஒருவர், உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பேரனாக ஒரு பழைய படத்தில் நடித்திருக்கிறார். அந்த நடிகர் யார்? அவர் எந்த படத்தில் கமல் ஹாசனுக்கு பேரனாக நடித்தார்? இங்கு பார்ப்போம்.
கமல்ஹாசனின் பழைய படத்தில் பேரானாக நடித்தவர்…
நடிகர் கமல்ஹாசன், தமிழ் படங்கள் மட்டுமன்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரியும். அப்படி, அவர், 1985ஆம் ஆண்டு நடித்திருந்த படம், ஸ்வாதி முத்யம். இந்த படத்தில் கமல், ராதிகா சரத்குமார், சரத் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் பெரிய வெற்றி பெற்றதை தொடந்து, இதை தமிழிலும் சிப்பிக்குள் முத்து என்ற பெயரில் ரீ-மேக் செய்தனர்.
இந்த படத்தில் கமல்ஹாசன் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞனாக நடித்திருப்பார். இவருக்கு ஜோடியாகவும் 5வயது பிள்ளைக்கு தாயாகவும் நடித்திருப்பார் ராதிகா. இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில், கமல் வயதான தோற்றத்தில் வந்திருப்பார். இக்காட்சியில் அவர் தனது பேரன்களுடன் உள்ளது போல ஒரு ஃபேரேமில் காண்பிக்கப்பட்டிருக்கும். அதில், கமலுக்கு பேரனாக வரும் சிறுவன்தான், தற்பாேது பல கோடி ரசிகர்களை கொண்ட தெலுங்கு நடிகர், அல்லு அர்ஜுன். இப்படத்தில் நடிக்கும் போது அவருக்கு 5 வயதாம். இந்த படத்தை தயாரிப்பாளர் அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த். இந்த படத்தில் மட்டுமன்றி இன்னும் பல தெலுங்கு படங்களில் குழந்தை கதாப்பாத்திரமாக அல்லு அர்ஜுன் நடித்திருக்கிறார் (Allu Arjun As Kamal Haasan’s Grandson)
பான் இந்திய நடிகராக மாறிய அல்லு அர்ஜுன்:
நடிகர் அல்லு அர்ஜுன், தற்போது இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகராக உள்ளார். காரணம், அவர் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான புஷ்பா: தி ரைஸ் திரைப்படம்தான். இந்த படத்தில் புஷ்பா எனும் கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
தற்போது, அல்லு அர்ஜுன் புஷ்பா : தி ரூல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம், முதல் பாகத்தின் கதையுடன் தொடர்புடையது. இதில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை சுகுமார் இயக்கி வருகிறார். இப்படத்தின் மீது பல லட்சம் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதல் படம் போலவே, இப்படத்திற்கும் வரவேற்பு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படம், இந்த வருடத்தின் ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி வெளியாக உள்ளது (Pushpa 2 Update).
அட்லீயுடன் கைக்கோர்க்கும் அல்லு அர்ஜுன்?
ஜவான் படம் மூலம் பான் இந்திய அளவில் பிரபலமான இயக்குநராக மாறியவர், அட்லீ. ஜவான் படம் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்ததை தொடர்ந்து அட்லீயுடன் பல முன்னணி நடிகர்கள் கைக்காேர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அட்லீ இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ, அல்லு அர்ஜுன்தான் என்றும் கூறப்படுகிறது. இப்படம் குறித்த பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது (Allu Arjun Movie With Atlee).