Accident: டீ கடைக்குள் புகுந்த லாரியால் நேர்ந்த விபரீதம் 5 பேர் பரிதாப பலி!
புதுக்கோட்டை அருகே சிமெண்ட் லாரி மோதி 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி கொண்டு நள்ளிரவில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது நமண சமுத்திரம் அருகே லாரி வந்து கொண்டிருந்தபோது எதிர்பாரத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதையடுத்து சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்தது அருகில் இருந்த வேன் மற்றும் கார் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் மற்றும் காரில் இருந்த பக்தர்கள் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
சென்னை திருவள்ளூரை சேர்ந்த கோகுல கிருஷ்ணன், சுரேஷ் , சதீஷ், ஜெகநாதன், சாந்தி ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் மூன்று வயது சிறுமி உள்ளிட்ட 19 பேர் காயமடைந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காத மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நள்ளிரவில் நடந்த சாலை விபத்தில் பக்தர்கள் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பலியானவர்கள் அனைவரும் சென்னை சேர்ந்தவர்கள் இவர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்திக்கு மாலை அணிவித்து ஒவ்வொரு ஆலயமாக சென்றுள்ளனர். இவர்கள் தற்பொழுது ராமேஸ்வரம் நோக்கி செல்லும் பொழுது நமண சமுத்திரம் என்ற இடத்தில் இறங்கி தேநீர் அருந்தி உள்ளனர்.
இந்த பக்தர்கள் சைலோ மற்றும் இரண்டு வேனில் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.