ரஷ்யா நமது எதிராளி… புடின் செய்வது முறையல்ல: மேக்ரான் சரமாரி தாக்கு

ரஷ்யா நமது எதிராளி, புடின் அணு ஆயுத மிரட்டல் விடுப்பது முறையல்ல, வேறொரு நபர் ரஷ்யாவின் ஜனாதிபதியாகும்போது, நாம் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என சரமாரியாக புடினையும் ரஷ்யாவையும் தாக்கிப் பேசினார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.

போரில் ரஷ்யா வெற்றி பெற்றால்…
ரஷ்ய உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெறுமானால், ஐரோப்பா மீதான நம்பகத்தன்மை பூஜ்யமாகிவிடும் என்று கூறியுள்ள மேக்ரான், போர் ஐரோப்பாவில் பரவுமானால், அதற்கு முழுக்காரணமும் ரஷ்யாதான் என்றும், அதே நேரத்தில் நாம் வலிமையற்றவர்களாக இருந்துவிட முடிவு செய்தோமானால், அதாவது, ரஷ்யாவுக்கு சரியான பதிலடி கொடுக்காமல் விட்டுவிட்டோமானால், அது நாம் தோல்வியை தேர்ந்தெடுப்பதுபோலாகிவிடும் என்றும் கூறினார்.

ரஷ்யாவை எதிர்ப்பது விடயத்தில் நமக்கு நாமே கட்டுப்பாடுகள் விதித்துக்கொண்டே இருந்தோமானால், நாம் வலிமையற்றவர்கள் என ரஷ்யா நினைத்துவிடும் என்று கூறும் மேக்ரான், பிறகு, அது, உக்ரைனை ரஷ்யா தொடர்ந்து தாக்குவதற்கு ஆதரவளிப்பதுபோலாகிவிடும் என்றார்.

ரஷ்யா போரை நிறுத்தவேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறும் மேக்ரான், அது தன் படைகளை உக்ரைனிலிருந்து விலக்கிக்கொண்டு அமைதிக்கு வழியை ஏற்படுத்தவேண்டும் என்று கூறும் மேக்ரான், அதே நேரத்தில், பிரான்ஸ் ரஷ்யாவுக்கெதிராக மோதலைத் துவங்காது, ஏன்னெறால், பிரான்சுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் யுத்தம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

ரஷ்யா நமது எதிராளி
ரஷ்யா நமது எதிரி என்று கூறுவதைத் தவிர்த்த மேக்ரான், ரஷ்யா நமது எதிராளி என்று கூறியதுடன், புடின் அணு ஆயுத மிரட்டல்கள் விடுப்பது முறையல்ல என்றும் கூறினார்.

மேலும், உக்ரைன் கடினமான சூழலில் உள்ளது என்று கூறிய மேக்ரான், அதற்கு கூட்டாளி நாடுகளின் வலுவான ஆதரவு நிச்சயம் தேவை என்றும் கூறினார்.

அமைதி என்பது உக்ரைன் சரணாகதி அடைவது அல்ல என்று கூறும் மேக்ரான், அமைதியை விரும்புவது என்பது தோல்வி என்பதோ அல்லது உக்ரைனை விட்டுக்கொடுப்பதோ அல்ல என்றும் கூறினார்.

புடின் மீது மறைமுக தாக்குதல்
ரஷ்யா ஜனாதிபதியான ஒருவருடன், அவர் யாராக இருந்தாலும் சரி, அவருடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் ஒரு நாள் வரும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார் மேக்ரான். அதாவது, முதன்முறையாக, ரஷ்யாவில் புடினுக்கு பதிலாக வேறொருவர் ஜனாதிபதியாவது தொடர்பில் தன் விருப்பத்தை முதன்முறையாக வெளிப்படுத்தியுள்ளார் மேக்ரான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *