மறுபடியும் ஆப்பு.. கதறும் பாகிஸ்தான்.. இந்திய அணியால் சிக்கலில் மாட்டிக் கொண்ட பாக். கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியால் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு. 2025 சாம்பியன்ஸ் ட்ராபி எனும் சர்வதேச கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமையை போராடி பெற்றது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் கிரிக்கெட் தொடர் ஒன்று கூட பாகிஸ்தான் நாட்டில் நடைபெறவில்லை. பாகிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் அணிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்ற பொதுவான எண்ணமே அதற்கு காரணம். எனினும், சமீப ஆண்டுகளில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை உள்ளிட்ட அணிகள் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்று திரும்பி இருக்கின்றன.

இதை அடுத்து தங்கள் நாட்டில் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு போராடி அந்த உரிமையை பெற்றது. இந்த தொடரில் பங்கேற்க எட்டு முக்கிய கிரிக்கெட் அணிகள் பங்கேற்க தகுதி பெற்று உள்ளன. அதில் இந்தியாவும் ஒன்று.

ஆனால், நீண்ட காலமாகவே இந்திய அணி பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று கிரிக்கெட் ஆடுவதில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரிலும் இதே பிரச்சனை ஏற்பட்டு, பின்னர் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் இலங்கைக்கு மாற்றப்பட்டது.

அதே போல, இப்போது 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் செல்ல இந்திய அணிக்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதி கிடைக்காது என கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் இந்திய வீரர்கள் அடங்கிய குழு டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றது. ஆனால், டென்னிஸ் வீரர்களை விட இந்திய கிரிக்கெட் அணிக்கான அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும். எனவே, மற்ற விளையாட்டு வீரர்களை பாகிஸ்தான் செல்ல அனுமதித்தாலும் இந்திய கிரிக்கெட் அணியை அனுப்ப மத்திய அரசு சம்மதிக்காது என கூறப்படுகிறது.

எனவே, தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை பாகிஸ்தான் நாட்டில் நடத்துவதா? அல்லது இதற்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜா போன்ற நகரங்களில் நடத்துவதா? என்ற குழப்பத்தில் உள்ளது. சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கான எந்த திட்டத்தையும் எழுத்தளவில் கூட தீட்ட முடியாத நிலையில் இருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *