துருக்கியில் பூனையை கொன்ற வழக்கு: சம்பந்தப்பட்ட நபருக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை!
துருக்கியின் இஸ்தான்புல் நீதிமன்றம் பூனை கொடுமைப்படுத்திய நபருக்கு சிறை தண்டனை விதித்துள்ளது.
பூனை கொன்ற நபருக்கு சிறை தண்டனை
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள நீதிமன்றம், எரோஸ்(Eros) என்ற பெயரில் இருந்த பூனையை கொடூரமாகக் கொலை செய்த இப்ராஹிம் கெலோக்லன்( Ibrahim Keloglan) என்ற நபருக்கு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அவர் மீது “வீட்டு விலங்கை வேண்டுமென்றே கொலை செய்தல்” என்ற குற்றத்திற்காக இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
ஈரோஸ் என்ற பூனையை கொடூரமாகக் கொன்றதற்காக பசக்சேஹிர் மாவட்டத்தை சேர்ந்த இப்ராஹிம் கெலோக்லன் கைது செய்யப்பட்ட பின்னர் இரண்டாவது முறையாக இந்த வழக்கு பரிசீலிக்கப்படுகிறது.
இந்த கொடூர செயலுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்படையச் செய்து, விலங்கு கொடுமைக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை தூண்டியது.