உதயமாகிறார் சனி பகவான்: இந்த ராசிகளுக்கு இனி அனைத்திலும் வெற்றி, அபரிமிதமான பண வரவு
அனைத்து கிரகங்களிலும் சனிபகவான் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகின்றார். ஒரே ராசியில் அதிக காலத்திற்கு இருப்பதால் அவரது தாக்கமும் ராசிகளில் அதிகமாக இருக்கின்றது. சனியின் சிறு அசைவும் பெரிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன.
தற்போது சனிபகவான் கும்ப ராசியில் இருக்கிறார். இந்த ஆண்டு முழுவதும் அவர் இதே ராசியில் தான் இருப்பார். கும்பத்தில் அவர் இப்பொழுது அஸ்தமன நிலையில் இருக்கிறார். இன்னும் 3 நாட்களில் அதாவது மார்ச் 18ஆம் தேதி சனி கும்பத்தில் உதயமாக உள்ளார். கும்பத்தில் இந்த முறை சனிபகவானின் கடைசி உதயம் இதுவாக இருக்கும். ஏனெனில் மார்ச் 18 அன்று உதயமான பிறகு 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி அவர் அஸ்தமனம் ஆவார். அதன் பிறகு மீன ராசியில் பெயர்ச்சியாகி 2025 மார்ச் 25 ஆம் தேதிதான் அவர் மீண்டும் உதயமாவார்.
மார்ச் 18ஆம் தேதி காலையில் சனி பகவான் உதயம் ஆகிறார். சனிபகவானின் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். ஏழரை சனியால் கடுமையான பாதிப்புகளை எதிர் கொண்டிருக்கும் மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு அடுத்து ஒரு வருடத்திற்கு நிவாரணம் கிடைக்கும். இது மட்டுமின்றி இன்னும் சில ராசிகளும் இதனால் பலன் அடையப் போகின்றன. அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம் (Aries)
சனியின் உதயம் மேஷ ராசிக்காரர்களுக்கு சுகமானதாக இருக்கும். இந்த காலத்தில் உங்கள் பணியிடத்திலும் உங்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யம் காத்திருக்கிறது. உங்கள் பணி பாராட்டப்படுவதோடு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். புதிய இடங்களில் இருந்து வேலைக்கான வாய்ப்பு உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு பண வரவும் லாபமும் அதிகமாகும்.
மிதுனம் (Gemini)
சனி உதயம் மிதுன ராசிக்காரர்களுக்கு பலவித நல்ல பலன்களை அளிக்கும். நீங்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் இந்த காலத்தில் வெற்றி காண்பீர்கள். அரசியலுடன் தொடர்புடைய மிதுன ராசிக்காரர்கள் பெரிய பதவிகளை அடைவார்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். பண வரவு அதிகமாகும். வணிகத்தில் அதிக லாபத்தை காண்பீர்கள்.
சிம்மம் (Leo)
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி உதயம் லாபகரமானதாக இருக்கும். கூட்டாளிகளுடன் சேர்ந்து செய்யும் பணிகளில் இப்பொழுது லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள். இரும்பு, எண்ணெய் போன்ற சனியுடன் தொடர்புடைய பொருட்களில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.
கன்னி (Virgo)
சனி உதயத்தின் காரணமாக கன்னி ராசிக்காரர்களுக்கு அமோகமாக நற்பலன்கள் உண்டாகும். இந்த நேரத்தில் உங்கள் நிதிநிலை வலுவாக இருக்கும். பணியிடத்திலும் உங்கள் பணி பாராட்டப்படும். உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். காதல், வியாபாரம், வேலை என அனைத்து துறைகளிலும் வெற்றி காண்பீர்கள். இப்போது செய்யப்படும் முதலீட்டால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியமாக இருப்பீர்கள்
தனுசு (Sagittarius)
தனுசு ராசிக்காரர்களுக்கு சனி உதய காலத்தில் பெரிய பொறுப்புகள் கிடைக்கும். அரசியலுடன் தொடர்புடையவர்கள் பெரிய பதவிகளை எதிர்பார்க்கலாம். வணிகர்களுக்கு இந்த காலத்தில் பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குச்சந்தையுடன் தொடர்புடையவர்களுக்கு முதலீட்டால் நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தில் மரியாதையும் அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும்.