சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளை உச்சம் தொட வைப்பார் சுக்கிரன், தலைவிதி மாறும்
கிரக பெயர்ச்சிகளுக்கு ஜோதிடத்தில் மிக முக்கியமான இடம் உள்ளது. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கின்றது. கிரப் பெயர்ச்சிகளால் சில ராசிகளுக்கு சுப பலன்களும் சில ராசிகளுக்கு பிரச்சனைகளும் உருவாகும்.
திருமண வாழ்க்கை, பேச்சாற்றல், அறிவாற்றல், உலக இன்பம், அழகு, பணம், ஈர்ப்பு, செழிப்பு, ஆடம்பரம், அன்பு, பெருமை, செல்வம் ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ள சுக்கிரன் மார்ச் மாத இறுதியில் குரு பகவானின் ராசியான மீன ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். மார்ச் 31ஆம் தேதி சுக்கிரன் மீன ராசியில் பெயர்ச்சி ஆவார். குருவின் ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நன்மைகள் உண்டாகும். இவர்களது செல்வ செழிப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம் (Aries)
மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி பல வித நன்மைகளை அளிக்கும். பண வரவு அதிகமாகும். ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான பொழுதை செலவழிக்க நேரம் கிடைக்கும். குடும்பத்தில் அன்பும் அமைதியும் இருக்கும். நீங்கள் எதிர்பார்க்காத இடங்களில் இருந்து பண வரவு இருக்கும்
ரிஷபம் (Taurus)
சுக்கிரனின் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். நீங்கள் இந்த காலத்தில் செய்யும் அனைத்து பணிகளிலும் வெற்றி காண்பீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு மதிப்பும் பாராட்டும் கிடைக்கும். நீங்கள் நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ரிஷப ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
மிதுனம் (Gemini)
மீனத்தில் சுக்கிரனின் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண பல வாய்ப்புகள் கிடைக்கும். முன்னர் செய்த முதலீடுகளால் இப்பொழுது நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகள் மற்றும் உடன் பணி புரிபவர்களின் பாராட்டும் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஒரு பயணத்தை மேற்கொள்வீர்கள். வர்த்தகம் நிமித்தமாகவும் பயணங்கள் இருக்கும். இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்
தனுசு (Sagittarius)
தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி மனதுக்கு அமைதியையும் சந்தோஷத்தையும் தரும் வகையில் இருக்கும். உடல் நலம் மேம்படும். உங்கள் வாழ்க்கையில் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். பணியிடம், வணிகம் என அனைத்து இடங்களிலும் லாபம் அதிகரிக்கும். வீட்டை சீரமைக்க நினைத்திருந்தால் அதை இப்பொழுது செய்யலாம். வீடு, வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து நல்ல செய்தி கிடைக்கும் அவர்களின் முழுமையான ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குடும்ப உறவினர்கள் இடையே நல்ல ஒற்றுமை நிலவும்.