குபேர சிலையை தவறுதலா கூட இந்த திசையில் வைக்காதீங்க.. தரித்திரம் ஏற்படலாம்!
வீடுகளில், கடைகளில், அலுவலகங்களில் என பல இடங்களில் பல வகையான குபேரர் சிலையை நாம் பார்த்திருப்போம். குபேரர் சிலையை வீட்டில் வைத்திருந்தாலோ, அல்லது குபேர எந்திரத்தை வைத்து வழிபட்டாலோ வீட்டில் செல்வ வளம் குறையாமல் இருக்கும் என்பது ஐதீகம். வீட்டில் என்றென்றும், செல்வம் பெருகி இருக்கவும், மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கவும், செல்வத்திற்கு அதிபதியான குபேரர் சிலை வைப்பது நல்லது என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆன்மீக ரீதியாகவும், வாஸ்து ரீதியாகவும் குபேரர் சிலை வீட்டிற்கு மகிழ்ச்சி, ஆகியவற்றைக் கொடுப்பதாக கருதப்படுகிறது. குபேர எந்திரத்தை வீட்டில் வைத்து வழிபடுவது கூட நன்மை தரும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன. குபேரருக்கு உகந்த எண்ணான எழுவத்தி இரண்டு என்ற எண்ணிக்கையிலான கட்டங்களை கொண்ட எந்திரத்தை வீட்டின் வட திசையில் வைப்பது நல்லது என கூறப்பட்டுள்ளது. குபேர சிலை செல்வத்தை வழங்க மட்டுமல்ல பலவிதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் என்பது ஐதீகம்.
வாஸ்து சாஸ்திரத்தில், எந்தவிதமான பொருளையும் வைக்க, எந்த திசை சிறந்தது என்று கூறப்பட்டுள்ளது. அதனை மீறும் போது, பலன் கிடைக்காததோடு மட்டுமல்லாமல், சில சமயங்களில் அதன் காரணமாக பிரச்சனைகளை கூட சந்திக்க நேரிடும். குபேரர் சிலையை வீட்டின் தெற்கு திசையில் வைத்தால் அதன் மூலம் அசுப பலன்கள் கிடைக்கும் என்றும், இதனால் வீட்டில் தரித்திர நிலை ஏற்படலாம் என்றும் வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. ஏனெனில் பித்ரு மற்றும் எம தேவனுக்கான திசை தெற்கு திசையாகும். அதேபோன்று குபேரர் சிலையை, வீட்டின் மேற்கு திசையிலும் வைக்க கூடாது, ஏனெனில் மேற்கு திசை, சனி பகவானுக்கு உரிய திசையாக கூறப்படுகிறது. இந்த திசையில் குபேர சிலை இருந்தாலும் உடனடியாக அதை அகற்றி விடவும்.
தெற்கு திசை மேற்கு திசையை போன்று,, தென்மேற்கு திசையும் குபேர சிலைக்கு உகந்த திசை அல்ல. இதனால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் பரவும். எனவே வாஸ்து சாஸ்திரப்படி, குபேர சிலைக்கு மிகவும் உகந்த வடக்கு திசையில் வைத்தால் வீட்டில் என்றென்றும் செல்வம் நிறைந்திருக்கும். அதேபோல், கிழக்கு திசையும் குபேரர் சிலைக்கு ஏற்ற திசை.
முதுகில், தங்க நாணயங்கள் செல்வங்களை, மூட்டையாக சுமந்தபடி இருக்கும் குபேரர் சிலை தான், செல்வ வளத்தின் அடையாளமாகும். செல்வம் பெருக இதனை வைப்பது சிறப்பு. உங்கள் வேலை செய்யும் இடங்களிலும், இதனை வைக்கலாம். இதனால், வாழ்க்கையில் நிலையான வளர்ச்சி ஏற்பட்டு, செல்வ வளம் பெருகும். அதே போன்று தங்க நிற முலாம் பூசப்பட்ட குபேரர் சிலையும், செல்வ வளத்தை குறிக்கிறது. வீட்டில் என்றென்றும் பணம் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், பொருளாதார வளர்ச்சி ஏற்படவும், தங்க நிறத்தில் சிரித்துக் கொண்டிருக்கும் குபேரர் சிலையை வைத்தால், நல்ல பலன் கிடைக்கும்.