விமான நிலையமே இல்லாத உலகின் பிரபல நாடுகள் இவை! ஆனால் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகம்!

விமான சேவை இல்லாத நாடு என்பதை இன்று யாருமே கற்பனைக்கூட செய்து பார்க்க முடியாது. ஆனால், உலகில் சில நாடுகளில் விமான நிலையமே கிடையாது தெரியுமா? விமான சேவை இல்லாத நாடுகளின் பட்டியல் இது…

விமான நிலையம் என்பது வணிக ரீதியான விமானப் போக்குவரத்திற்காக பல்வேறு வசதிகளைக் கொண்ட நிலையமாகும் . விமான நிலையங்களில் விமானம் புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் ஓடுபாதை, ஹெலிபேட் என திறந்தவெளி மற்றும் விமானங்களை பராமரிக்கவும் கண்காணிக்கவும் தேவையான வசதிகள் இருக்கும். மேலும், கட்டுப்பாட்டு கோபுரங்கள், ஹேங்கர்கள் மற்றும் டெர்மினல்கள் கொண்டவை. அதேபோல, பயணிகள் வருகை, சரக்கு கையாளுதல், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்கள், உணவகங்கள் மற்றும் ஓய்வறைகள் போன்ற பயணிகள் வசதிகள் மற்றும் அவசர சேவைகளும் இருக்கும். ஆனால் சில நாடுகளில் விமான நிலையமே இல்லை என்பது ஆச்சரியமாக இருந்தாலும் அது உண்மை தான். அதில் ஐந்து முக்கிய நாடுகளின் பட்டியல் இது..

ஐரோப்பாவில் அமைந்துள்ள உலகின் மிகச் சிறிய நாடான வாடிகன் நகரத்திலும் விமான நிலையம் இல்லை. இந்த நாட்டின் மொத்த பரப்பளவு 108.7 ஏக்கர் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் மிகச் சிறிய நாடுகளில் முதன்மையானது வாடிகன் சிட்டி…

உலகின் பழமையான நாடுகளில் ஒன்றான சான் மரினோவில் ஒரு விமான நிலையம் கூட இல்லை. இங்குள்ள மக்கள் இத்தாலியில் உள்ள ரிமினி விமான நிலையத்திற்கு சாலை மூலம் செல்கின்றனர்.

பிரான்ஸ் மற்றும் இத்தாலிக்கு இடையே இந்த நாட்டில் விமான நிலையம் இல்லை. மொனாக்கோவின் மக்கள்தொகை மற்றும் பரப்பளவு இரண்டும் சிறியதாக இருப்பதால் இங்கு விமான நிலையம் இல்லை.

லிச்சென்ஸ்டைனில் விமான நிலைய வசதியும் இல்லை. இங்கிருந்து பயணிக்க, மக்கள் சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் விமான நிலையத்திற்கு செல்கின்றனர்.

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் இடையே அமைந்துள்ள இந்த நாடு மலைகளால் சூழப்பட்டதால் இங்கு விமானத்தில் பறப்பது ஆபத்தானது. அதனால்தான் அன்டோராவில் விமான நிலையம் இல்லை.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *