பக்கவிளைவுகள் இல்லாமல் பக்காவா எடை குறைக்க இதோ சூப்பர் டிப்ஸ்

தொப்பையில் சேரும் கொழுப்பு அடாவடி கொழுப்பாக இருக்கின்றது. இதை கரைப்பது ஒரு பிரம்ம பிரயத்னமாகவே உள்ளது. தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைத்து உடல் எடையை குறைக்க பல வழிகள் உள்ளன. சிலர் ஜிம், டயட் என முயற்சி செய்கிறார்கள். சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அவற்றை பற்றி இங்கே காணலாம்.

உடல் பருமன் உலகில் பலரை வாட்டி வதைக்கும் ஒரு பிரச்சனையாக மாறிவிட்டது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல என்ன செய்தால் எடையை குறைக்கலாம் என்ற சிந்தனையிலேயே பலர் உள்ளனர்.

நம் உடல் எடையை குறைக்க நாம் எடுக்கும் முயற்சிகளால் நமக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படக்கூடும். ஆகையால் நாம் பின்பற்றும் உணவுமுறைகளும் வாழ்க்கை முறைகளும் ஆரோக்கியமானவையாகவும் நேர்த்தியானவையாகவும் இருக்க வேண்டும். அப்படி சிலவற்றை பற்றி இங்கே காணலாம்.

நாம் ஆரோக்கியமாக வாழ, ஆரோக்கியமான உடல் மிக அவசியம். நம் உடல் ஆரோக்கியமாக இருக்க, அதற்கு தேவையான ஓய்வை நாம் அளிக்க வேண்டும். சரியான தூக்கம் இல்லாமல் போனால் உடல் எடை வேகமாக அதிகரிக்கின்றது. உடல் எடையை குறைக்க தினமும் 7-8 மணிநேரம் தூங்க வேண்டியது மிக அவசியமாகும்.

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் வேகமாக கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இது செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு பெரிதும் உதவுகிறது. இதனால் தொப்பை கொழுப்பை குறைப்பதிலும் உடல் எடையை குறைப்பதிலும் அதிக உதவி கிடைக்கின்றது.

நமது உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கவும், உடல் எடை கட்டுக்குள் இருக்கவும் தினசரி குறைந்தபட்சம் 30 நிமிட உடற்பயிற்சி அவசியமாகும். உடல் செயல்பாடு இல்லாத நிலை வேகமாக உடல் எடை அதிகரிக்க பெரிய காரணமாக இருக்கின்றது. உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, ஜாகிங், யோகா என எதை வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம்.

சிலர் காலை உணவை தவிர்த்தால் உடல் எடை குறையும் என நினைக்கிறார்கள். ஆனால், அது மிகவும் தவறான கருத்து. நார்ச்சத்து அதிகம் உள்ள, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வதன் மூலம், தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையையும் குறைக்கலாம்.

தினசரி உணவில் அதிக அளவில் காய்கள் மற்றும் பழங்களை சேர்ப்பதன் மூலம் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதோடு கலோரிகளும் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளலாம். இவற்றால் வயிற்றுக்கும் நிரம்பிய உணர்வு கிடைக்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *