குழந்தைகளை தீய சகவாசத்தில் இருந்து தள்ளி வைப்பது எப்படி? டிப்ஸ் இதோ!

குழந்தைகள், எதை பார்த்து, யாரை பார்த்து வளர்கிறார்களோ, அதுவாகவே வளர்ந்தவுடன் மாறுவதாக கூறப்படுகிறது. அதனால், சிறிய வயதில் இருந்தே, அவர்களுக்கு நல்ல விஷயங்களை கற்பித்து வளர்த்தால், நல்ல முறையில் வளர்கின்றனர். ஆனால், அந்த இளம் வயதுதான் அவர்களுக்கு மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் வயதும் கூட. இந்த வயதில் அவர்கள், தீய பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் பல உண்டு. இதை தவிர்ப்பது எப்படி? இதோ முழு டிப்ஸ்!

குழந்தைகள், மிக இளம் வயதில் பிறரால் மிக எளிதாக இன்ஃப்ளுவன்ஸ் ஆக்கப்படுவர். பெறோர்கள், சரியாக அவர்களின் நடவடிக்கைகளுக்கு கவனம் கொடுக்கவில்லை என்றால், பின்னால் அது பெரிய பிரச்சனையில் கொண்டு சென்று விட்டுவிடும். எனவே, அவர்களை தீய சகவாசத்திடம் இருந்து பாதுகாக்க, பெற்றோர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

குழந்தைகள் என்ன கூறுகிறார்கள் என்பதை முதலில் காதுகொடுத்து கேட்க வேண்டும். அவர்களின் உணர்ச்சிகளுக்கும், அவர்களின் வார்த்தைகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். அதற்கு அவர்களை மனம் விட்டு பேச அனுமதிக்க வேண்டும். இப்படி செய்வதால், அவர்கள் யாருடன் பழகுகிறார்கள், யாரிடம் இருந்து பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

குழந்தைகளின் பள்ளிகளில் நடக்கும் போட்டிகளுக்கு செல்வது, ஆண்டு விழாக்களில் கலந்து கொள்வது, அவர்களுக்காக நேரம் ஒதுக்குவது போன்ற விஷயங்களை பெற்றோர்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும். இது அவர்களை பெற்றோருடன் இன்னும் நெருக்கமாக்கும்.

குழந்தைகளுக்கு யோசிக்கும் திறனை கற்றுக்கொடுக்க வேண்டும். கடினமான சூழ்நிலைகளை எப்படி கையாள்வது, யார் தன்னிடம் எப்படி பழகுகிறார்கள் என்பதை யோசிக்கும் திறன் ஆகியவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு முன்மாதிரியாக திகழும் வெற்றியாளர்களை அறிமுகப்படுத்தலாம். அவர்கள் குடும்ப உறுப்பினர்களாகவோ, ஆசிரியர்களாகவோ இருக்கலாம். அவர்களுடன் பழகுவது மூலமாக குழந்தைகள் நல்ல விஷயங்களை கற்றுக்கொள்வர்.

குழந்தைகளுக்கு நண்பர்களாக இருந்தாலும் அவர்களுடன் எந்த எல்லையில் இருக்க வேண்டும் என்பதையும், பிறர் அவர்களிடம் எந்த எல்லையில் இருக்க வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

உங்கள் குழந்தைகள் எந்த மாதிரியான நண்பர்களுடன் பழகுகிறார்கள் என்பதையும் அவர்கள் உங்கள் குழந்தையுடன் நல்ல முறையில்தான் பழகுகிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும். இதனால் வரவிருக்கும் ஆபத்தை முன்கூட்டியே கண்டறிந்து தவிர்க்கலாம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *