ஆண்களை விட பெண்கள் அதிக நேரம் தூங்க வேண்டும்… காரணம் என்ன!

உலக தூக்க தினம் (World Sleep Day) வருடாவருடம் மார்ச் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தூக்கம் என்பது ஆண், பெண் உள்ளிட்ட அனைத்து பாலினத்தவர்களுக்கும் அத்தியாவசியமான நிலையில், பெண்களுக்கு 7-8 மணிநேரங்களை விட கூடுதல் தூக்கம் தேவைப்படுகிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தூக்கம் என்பது மூளை சுறுசுறுப்பாக இருக்கவும், உடல் புத்துணர்ச்சியாக இருப்பதற்கும் மிகவும் அவசியமானது. மூளை தன்னை தானே சரியாக்கிக்கொள்ள தூக்கம்தான் ஒரே வழி.

ஆண், பெண் மட்டுமின்றி ஒவ்வொரு வயதினருக்கும் தூக்கத்திற்கான கால அளவு என்பது மாறுபடும். 7-9 மணிநேரம் குழந்தைகளுக்கும், 7-8 மணிநேரம் வயது வந்தோருக்கும் தூக்கம் தேவை என கூறப்படுகிறது.

வயது வந்தோரில் ஆண்களை விட பெண்கள் இன்னும் சற்று நேரம் கூடுதலாக தூங்க வேண்டும் என்று ஓர் ஆய்வின் முடிவில் வெளியாகி உள்ளது. அதனால், பெண்கள் 7-8 மணிநேரத்தை விட சற்று கூடுதலாக தூங்க வேண்டும்.

அதாவது, பெண்களின் மூளை சற்று வித்தியாசமானது, ஆண்களுடையதை விட சற்று சிக்கலானதும் கூட. பெண்கள் ஆண்களை விட ஒரே நேரத்தில் பல விஷயங்களை செய்யக்கூடியவர்கள். எனவே, அவர்களின் மூளை விரைவாக செயல்படும், அதிகம் செயல்படும்.

இந்த காரணத்தினால்தான் பெண்களுக்கு ஆண்களை விட சற்று அதிக தூக்கம் தேவைப்படுகிறது என கூறப்படுகிறது. அதில் சராசரியாக 7 மணிநேரம் வயது வந்தோர் தூங்குகிறார்கள் என்றால் பெண்களுக்கு இதில் 11-20 நிமிடங்கள் கூடுதல் தூக்கம் வேண்டும் என்றும் Sleep Foundation ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூக்கமின்மை பிரச்னையில் ஆண்களை விட பெண்களே 40% அதிகம் பாதிப்பிற்கு உள்ளாவதாகவும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தூக்கமின்மையால் பெண்களுக்கு கவலை மற்றும் மன அழுத்தம் ஏற்படும். எனவே, பெண்கள் தவறாமல் நீண்ட தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *