உங்க வீட்ல ஒண்ணுன்னா ஓடி வரமாட்டீங்க.. சிம்பு, தனுஷ், விஷால், சூர்யாவை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை மாறன்!
புத்தாண்டு கொண்டாட்டத்தை வசதி படைத்த முன்னணி நடிகர்கள் சமீப காலமாக வெளிநாடுகளில் தான் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு நியூ இயர் பண்டிகையை முன்னிட்டு நடிகர்கள் சூர்யா, விஷால், சிம்பு உள்ளிட்ட பலரும் வெளிநாட்டில் டூர் அடித்து வருகின்றனர். இதற்கிடையே திடீரென விஜயகாந்த் உயிரிழந்தது திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், கமல்ஹாசன் உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்திச் சென்றனர். வயதில் மூத்தவர்களான கவுண்டமணி, இளையராஜா, ராதாரவி உள்ளிட்ட பலரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களும் விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
ஆனால், வெளிநாடுகளுக்கு டூர் சென்றுள்ள நடிகர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளான விஷால், கார்த்தி எல்லாம் வெறும் இரங்கல் பதிவுடன் நிறுத்திக் கொண்டது ஏன் என்றும் உங்க வீட்டில் யாருக்காவது இப்படி நடந்திருந்தால் இந்நேரம் ஃபிளைட் புடிச்சி வந்திருக்க மாட்டீங்களா என்கிற தொனியில் நல்லா புத்தாண்டை கொண்டாடிட்டு பொறுமையா வந்து பாருங்க என சூர்யா, கார்த்தி, தனுஷ் மற்றும் சிம்புவை கழுவி ஊற்றியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
நடிகர் விஜய் வந்தாரே அஜித் ஏன் வரவில்லை. ஒரு வீடியோ மெசேஜ் கூட இந்த நேரத்தில் போட முடியாதா? பிரேமலதாவுக்கு வெறும் போன் மூலம் மட்டுமே இரங்கல் தெரிவித்தார் என தக்வல் மட்டும் வருகிறதே என்றும் கேள்விகளை எழுப்பி உள்ளார்.
ஒரு மனிதர் உயிரிழந்தார் அத்தனை லட்சம் மக்கள் உள் அன்புடன் ஒன்று திரண்டது போல நடிகர்களும் பெரிய மனதுடன் இருப்பார்களா? என்ன என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்