சனி உச்சத்தில் கொண்டு செல்லும் ராசிக்காரர்கள்
ஆயுள் காரகனாக விளங்க கூடியவர் சனி பகவான். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பதை இவருடைய வேலை. நீதிமானாக விளங்கக்கூடிய ஒரு சனி பகவான் நன்மை தீமைகள் என பாரபட்சம் இல்லாமல் அனைத்தையும் திருப்பிக் கொடுப்பார்.
சனிபகவான் தற்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் 2025 ஆம் ஆண்டு வரை இதே ராசியில் பயணம் செய்வார். 2024 ஆம் ஆண்டு முழுவதும் இதய ராசியில் பயணம் செய்ய உள்ளதால் இவருடைய பயணத்தின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும்.
அனைத்து ராசிகளுக்கும் பலன்கள் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற உள்ளனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
சனிபகவான் வரக்கூடிய புத்தாண்டில் உங்களுக்கு லாபத்தை கொடுக்கப் போகின்றார். பண வரவில் எந்த குறையும் இருக்காது. திருமண தடைகள் அனைத்தும் விலகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். கடின உழைப்புக்கு முழு பலன்களும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். கருத்து வேறுபாடுகள் குறையும்.
ரிஷப ராசி
சனிபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மிதுன ராசி
சனியின் பயணம் உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அனைத்தும் விலகும். சனி பகவானின் இடமாற்றம் உங்களுக்கு தனயோகமாக கிடைக்கப் போகின்றது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சனியின் பார்வை உங்களது பொருளாதார தடைகளை நீக்கும். பண வரவில் இந்த குறையும் இருக்காது. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து சிக்கல்கள் உலகம்.
சிம்ம ராசி
சனிபகவான் உங்களுக்கு ஷஷ யோகத்தை கொடுக்கப் போகின்றார். வேலை மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். சனி பகவானின் பார்வை உங்கள் மீது விழுகின்ற காரணத்தினால் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். உங்களுக்கு வளர்ச்சி உண்டாகும்.