312 மடங்கு அதிக சம்பளம் வாங்கும் IBM சிஇஓ அரவிந்த் கிருஷ்ணா.. ஒரு மாசம் சம்பளம் எவ்வளவு தெரியுமா?!

உலகின் மிக பழமையான டெக் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஐபிஎம், ஒருகாலத்தில் ஆப்பிள் நிறுவனத்தை கம்ப்யூட்டர் வர்த்தகத்தில் வளர விடாமல் பெரும் போட்டியாக இருந்தது. ஆனால் இன்று டெக் நிறுவனங்கள் மத்தியில் ஐபிஎம்-ஐ தேட வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.

தொழில்நுட்ப உலகின் வளர்ச்சிக்கு ஐபிஎம் தன்னை மாற்றிக்கொள்ளாதது தான் பெரும் பிரச்சனையாக கூறப்படும் வேளையில், அனைத்து தடைகளையும் உடைத்து மீண்டும் லாபகரமாக மாற்ற ஐபிஎம் நிர்வாகம் கூகுள், மைக்ரோசாப்ட் செய்தது போலவே இந்தியரை நியமித்தது.

அரவிந்த் கிருஷ்ணா ஐபிஎம் சிஇஓ-வாக பதவியேற்ற நாளில் இருந்து அதிரடியாக பல மாற்றங்களை செய்தார், இதன் மூலம் நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் லாபம் தொடர்ந்து உயர துவங்கியது. இதனால் அரவிந்த் கிருஷ்ணா-வின் சம்பளமும் உயர்ந்துள்ளது.

ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அரவிந்த் கிருஷ்ணா 2023 ஆம் ஆண்டிற்கான சம்பளம், கடந்த ஆண்டில் பெறப்பட்ட 16.5 மில்லியன் டாலரில் இருந்து 23 சதவீதம் அதிகரித்து 20 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று இந்நிறுவனத்தின் 2024 ப்ராக்சி அறிக்கை தெரிவிக்கிறது.

2023 ஆம் ஆண்டிற்கான செயல்பாட்டை கணக்கிட்ட IBM நிறுவனத்தின் இயக்குனர் குழு அரவிந்த் கிருஷ்ணாவுக்கு 3.5 மில்லியன் டாலர் வருட ஊக்கத்தொகை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தொகையை அளிக்க அரவிந்த் தனது இலக்கை விட 117% அதிகமான வளர்ச்சியை காட்டியுள்ளார்.

மேலும் அரவிந்த் கிருஷ்ணாவின் அடிப்படை சம்பளம் 1.5 மில்லியன் டாலர் அளவில் மாற்றமில்லை, 2023 ஆம் ஆண்டில் 11.4 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்கு ஊதியத்தையும் (stock awards) பெற்றார் என்று அறிக்கை தெரிவிக்கிறது.

2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎம் நிறுவனத்தின் வருவாய் 61.9 பில்லியன் டாலராகும், இதில் ஆப்ரேஷன்ஸ் லாபம் மட்டும் 13.9 பில்லியன் டாலராகும். இவற்றைக் கருத்தில் கொண்டே அரவிந்த் கிருஷ்ணாவின் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக நிறுவனத்தின் ஊதியக் குழு தெரிவித்துள்ளது.

இதேபோல் ஐபிஎம் நிறுவனத்தின் சாப்ட்வேர் பிரிவின் வருவாய் கடந்த ஆண்டை விட 5% அதிகரித்துள்ளது, மேலும் கன்சல்டிங் பிரிவின் வருவாய் 6% அதிகரித்துள்ளது. இதன் வாயிலாக ஐபிஎம் நிறுவனத்தின் ஃப்ரீ கேஷ் ஃப்லோ 11.2 பில்லியன் டாலராக உள்ளது, இது கடந்த ஆண்டை விட 1.9 பில்லியன் டாலர் அதிகமாகும்.

2023 ஆம் ஆண்டில், ஐபிஎம் நிறுவனம் 9 முக்கிய நிறுவனங்களை கையகப்படுத்தியுள்ளது, ஹைப்ரிட் கிளவுட் மற்றும் AI திறன்களை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தி ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் பொறியியலுக்காக சுமார் 7 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.

ஐபிஎம் சிஇஓ அரவிந்த் கிருஷ்ணாவின் சம்பளத்தையும், இந்நிறுவனத்தின் சராசரி ஊழியரின் ஆண்டு வருமானத்தையும் ஒப்பிடுகையில் மீடியன் விகிதம் 312:1 ஆக உள்ளது. அதாவது அரவிந்த் கிருஷ்ணாவின் சம்பளம் 20.3 மில்லியன் டாலர் சராசரி ஊழியருக்கு 65,463 டாலர் சம்பளம் கொடுக்கப்படுகிறது.

IBM CFO ஜேம்ஸ் கவனாக் 11.6 மில்லியன் டாலர் சம்பளமும், அதன் தலைமை வணிக அதிகாரி RD தாமஸ் 10.3 மில்லியன் டாலர் சம்பளமும், துணைத் தலைவர் கேரி கோனுக்கு 9.5 மில்லியன் டாலர் வழங்கப்பட்டது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *