புதிய யெஸ்டி ரோட்ஸ்டெர் பைக்கின் படங்கள் வெளியானது
கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவன யெஸ்டி பிராண்டில் புதிய ரோட்ஸ்டெர் ரெட்ரோ ஸ்டைலை பெற்ற மோட்டார்சைக்கிள் மாடல் சமீபத்தில் நடைபெற்ற ஜாவா யெஸ்டி டீலர் நிகழ்வின் மூலம் இணையத்தில் கசிந்துள்ளது.
தற்பொழுது விற்பனையில் உள்ள யெஸ்டி அட்வென்ச்சர் பைக்கில் இடம்பெற்றுள்ள 334cc லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு ஒற்றை எக்ஸ்ஹாஸ்ட் கொண்டதாக அமைந்திருக்கின்றது. சமீபத்தில் வெளியான ஜாவா 350 பைக்கில் உள்ளதை போல பவர் சற்று குறைவாக இருக்கலாம்.
வட்ட வடிவ ஹெட்லைட் யூனிட் பெற்று மிக நேர்த்தியான பெட்ரோல் டேங்கில் யெஸ்டி அட்வென்ச்சரில் உள்ளதை போன்ற கிராபிக்ஸ் உடன் கூடிய லோகோ பெற்றதாகவும், பக்கவாட்டில் உள்ள பாக்ஸ் பேனலிலும் யெஸ்டி Y லோகோ இடம்பெற்றுள்ளது. இரு பிரிவுகளை கொண்ட அனலாக் கிளஸ்ட்டருடன் கூடுதலாக சிறிய டிஜிட்டல் கிளஸ்ட்டரும் இடம்பெற்றுள்ளது.
மற்றபடி, ஒற்றை ஃபிளாட் இருக்கையுடன் மிக அகலமான டயரை பெற்றதாகவும் அமைந்துள்ள இந்த மாடலின் இரு பக்க டயரிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.
பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் மற்றும் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் கொண்டதாக உள்ள இந்த யெஸ்டி பைக்கின் விற்பனைக்கு வருகை குறித்தான எந்த தகவலும் தற்பொழுது அறிவிக்கப்படவில்லை. அனேகமாக இந்த மாடல் நடப்பு ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றது.