கனடாவில் இஸ்லாமியர் வெறுப்பு உள்ளது! உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும் – ஜஸ்டின் ட்ரூடோ

கனடாவில் இஸ்லாமியர் வெறுப்பு மனநிலை உள்ளதை ஒழிக்க, நாம் செய்ய வேண்டிய வேலை இருக்கிறது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர் வெறுப்பு மனநிலை
ஜஸ்டின் ட்ரூடோ இஸ்லாமியர் வெறுப்பு மனநிலை எனும் இஸ்லாமோஃபோபியாவிற்கு எதிராக உறுதியாக நிற்பதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். ஆனால், அவர் வெறுப்பு எதிர்ப்புக்குழு மூலம் விமர்சனங்களை எதிர்கொள்கிறார்.

இஸ்லாமியர்களுக்கு எதிரான கொள்கைகளுக்கு எதிராக ட்ரூடோ செயல்பட மறுத்துவிட்டதாக அக்குழு கூறுகிறது.

இந்த நிலையில் இஸ்லாமிய வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச தினத்தைக் குறிக்கும் அறிக்கையை வெளியிட்டார்.

அதில், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புக்கு எதிரான கனடா தொடர்ந்து போராடும் என்று தெரிவித்த அவர், துரதிர்ஷ்டவசமாக இஸ்லாமோஃபோபியா பல கனேடியர்களுக்கு ஒரு வாழ்க்கை அனுபவமாக உள்ளது.

அதனால் தான் கடந்த ஆண்டு இஸ்லாமோஃபோபியாவை எதிர்த்துப் போராடுவதற்கான முதல் சிறப்புப் பிரதிநிதியை நியமித்தோம் என்றார்.

நாங்கள் உறுதி செய்கிறோம்
மேலும் அவர் தனது அறிக்கையில், ”அனைத்து மதங்களைச் சேர்ந்த கனேடியர்களும் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் தங்கள் மதத்தைப் பின்பற்றுவதை நாங்கள் உறுதி செய்கிறோம். இஸ்லாமோஃபோபியாவிற்கு எதிராக கனடா விழிப்புடன் இருக்க வேண்டும். கனடா நீண்ட தூரம் வந்துவிட்டது, ஆனால் நாம் இன்னும் செய்ய வேண்டியிருக்கிறது” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ட்ரூடோ வெளியிட்ட தனது எக்ஸ் பதிவில், ‘உண்மையை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்: இஸ்லாமோஃபோபியா இங்கே கனடாவில் உள்ளது, வீதியில் இருந்தாலும் சரி, ஒன்லைனில் இருந்தாலும் சரி அல்லது அனைவரின் பாதுகாப்பையும், அச்சுறுத்தும் வெறுக்கத்தக்க குற்றங்களில் இருந்தாலும் சரி. அது இருக்கும்வரை, அதை ஒழிக்க நாம் செய்ய வேண்டிய வேலை இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *