20 அறைகளுடன் அரண்மனை.. Mommy Makeover சிகிச்சைக்கு 150,000 டொலர்: கோடீஸ்வர கணவரிடம் மனைவி போட்ட லிஸ்ட்
குழந்தை பிறக்கும் போது என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று தனது கோடீஸ்வர கணவரிடம் மனைவி தனது கோரிக்கைகளை கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.
பொதுவாக குழந்தை பிறக்கும் போது தனது மனைவிக்கு பிடித்ததை எல்லாம் செய்ய வேண்டும் என்றும், ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று கணவர் ஆசைப்படுவதுண்டு.
ஆனால், மனைவி ஒருவர் தனக்கு குழந்தை பிறக்கும் போது கணவர் வாங்கி கொடுக்க வேண்டிய லிஸ்டை பார்க்கும் போது வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மனைவியின் கோரிக்கை
ஜமால் அல் நடக் என்ற தனது கோடீஸ்வர கணவரிடம் குழந்தை பிறக்கையில் தனக்கும், தனது குழந்தைக்கும் தேவையான பல கோரிக்கைகளை அவரது மனைவி வைத்துள்ளார்.
இந்த தம்பதியினர் தனது ஆடம்பரமான வாழ்க்கை குறித்து சமூக வலைதளமான இன்ஸ்ட்டாகிராமில் அடிக்கடி பதிவுகளை தெரிவிப்பது உண்டு. அந்தவகையில், அவரது மனைவி தனது ஆசைகளை அடுக்கியுள்ளார்.
அந்த வீடியோவில் அவர், “புர்ஜ் அல் அராபில் குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்த 100,000 டொலர்கள், குழ்நதை பிறந்த பின்னர் அமெரிக்காவைச் சேர்ந்த சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் `Mommy Makeover’ சிகிச்சைக்கு 150,000 டொலர்.
பெண்குழந்தையாக இருந்தால் விலையுயர்ந்த புதிய Dior collection, ஆண் குழந்தையாக இருந்தால் உல்லாச பயணம் செல்ல படகு, தனக்கும் தனது குழந்தைக்கும் 20 படுக்கையறைகள் கொண்ட பெரிய அரண்மனை வேண்டும்” என்று கூறியுள்ளார்.