இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கான புதிய முன்மொழிவு

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் கைதிகளை விடுவிப்பதற்கான புதிய போர்நிறுத்த முன்மொழிவை எகிப்து மற்றும் கத்தாரில் உள்ள மத்தியஸ்தர்களிடம் சமர்ப்பித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

ஹமாஸ் போர் நிறுத்தத்தை முன்மொழிவது இது நான்காவது முறையாகும் என்று சர்வதேகச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் இஸ்லாமிய ரமலான் நோன்புப் பருவத்திற்கு மனிதாபிமான உதவிகள் அதிகளவில் தேவைப்படுவதாகவும், தெற்கு காசா பகுதியில் உள்ள உணவு விநியோக மையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீன மக்கள் அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது.

திட்டமிட்ட தாக்குதல்
மேலும் இந்த தாக்குதல் திட்டமிட்ட தாக்குதல் என காசா சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இதுவரை 31,341 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 73,134 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சு மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *