அஜித் பட நடிகை பூஜாவை ஞாபகம் இருக்கா…? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க
நடிகை பூஜாவின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகை பூஜா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை பூஜா.இவர் இலங்கையில் பிறந்தவர். தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் இவர் நடித்துள்ளார்.
நடிகர் மாதவன் நடிப்பில் வெளியாக ஜேஜே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் தல அஜித் நடிப்பில் வெளியான அட்டகாசம் திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார்.
அட்டகாசம் திரைப்படம் பூஜாவின் சினிமா பயணத்தில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது என்றே கூறலாம்.
பின்னர் பரத்துடன் பட்டியல், மாதவனுடன் தம்பி, பிரசாந்த் உடன் தகப்பன்சாமி, ஜீவாவுடன் பொறி, ஆர்யாவுடன் ஓரம் போ ஆகிய படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
நான் கடவுள் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் அனைவராலும் பராட்டப்பட்டது.
நான் கடவுள் படத்தில் இவரது சிறப்பான நடிப்பிற்காக பிலிம்பேர் விருதுதையும் பெற்றார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கையை சேர்ந்த பிரஜன் டேவிட் வேதகன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், நடிகை பூஜாவின் தற்போதைய புகைப்படங்கள் இணைத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகின்றது.