கர்ப்பத்தை கியூட்டாக அறிவித்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை… குவியும் வாழ்த்துக்கள்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் ரித்திகா தமிழ் செல்வி.
சீரியல் நடிகை ரித்திகா
ராஜா ராணி சீரியலில் வினோதினி என்கிற கதாபாத்திரத்தில் தனது அழகாக நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
முதல் சீரியலிலேயே மக்களின் மனதை கொள்ளைகொண்ட இவர் தொடர்ந்து சிவா மனசுல சக்தி, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சாக்லேட், திருமகள் போன்ற தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இதனால் தொடர்ந்தும் விஜய் டிவியில் ஆரம்பமான பாக்கியலட்சுமி சீரியலில் அம்ரிதா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த சீரியலில் எழிலுக்கு ஜோடியாக நடித்த இவர், அதனிடையே குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார்.
குக் வித் கோமாளியில் 2-வது சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக பங்கேற்று தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தினார் ரித்திகா.
பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பியில் சக்கைப்போடு போட்டு வந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு வினு என்பவரை காதல் திருமணம் செய்துக்கொண்டார்.
இவர்களது திருமணம் கேரளாவில் எளிமையாக நடைபெற்று பின்னர் சென்னையில் பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஏறாளமான பிரபலங்களும் கலந்துக்கொண்டு வாழ்து தெரிவித்திருந்தனர்.
திருமணத்தின் பின்னரும் சீரியலில் நடித்து வந்த இவர் திடீரென சீரியலில் இருந்து விலகினார். அதன் பின்னரும் சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டிவந்த ரித்திகா தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக பதிவொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
குறித்த பதிவு இணையத்தை ஆக்கிரமித்து வருவதுடன் ரித்திகாவிற்கு ரசிகர்களின் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.