இப்படியும் மனிதர்களா? விஷ பாம்புகளுடன் விளையாடும் குழந்தைகள்… ஒரு வினோத கிராமம்!
பொதுவாகவே பாம்புகள் என்றால் அனைவருக்கும் இனம் புரியாக பயம் இருக்கும். பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று பழமொழி கூட இருக்கின்றது.
பாம்பை கண்டு அனைவரும் பயப்படுவதற்கு முக்கிய காரணம் அதன் விஷம் தான். பாம்புகளுக்கு பற்களில் விஷம் இருப்பதற்கு காரணம் தனது இறையை வேட்டையாடுவதற்காகவே.
ஆனால் பாம்புகள் மனிதர்களை கடிப்பது வேட்டையாடுவதற்காகவோ அல்லது கொல்ல வேண்டும் என்ற நோக்கத்திலோ அல்ல. மாறாக மனிதர்கள் தன்னை கொன்றுவிடுவார்கள் என்ற அச்சத்தினால் தான்.
பாம்பு கடித்த சில நிமிடங்களிலேயே விஷம் உடல் முழுவதும் பரவி நாம் இறக்க நேரிடும். இதனால் பாம்புகளின் அருகில் செல்வதை கூட யாரும் விரும்புவதில்லை.
ஆனால் மகாராஷ்டிராவில் உள்ள சோலாப்பூர் மாவட்டத்தின் மோஹோல் தாலுகாவிற்கு உட்பட்ட ஷெட்பால் கிராமத்தில் மக்கள் பாம்புகளுடன் தான் வாழ்ந்து வருகின்றனர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் ஷெட்பால் கிராமத்தில்தான் இப்படியான ஒரு வினோத பழக்கம் இருந்து வருகிறது.
இந்த கிராமத்து மக்கள் பாம்புகளை கண்டு அஞ்சுவது இல்லை. அதை குடும்பத்தில் ஒருவராக நடத்துகிறார்கள். உணவளிப்பது, பாம்புகளுடன் விளையாடுவது மட்டுமன்றி தங்களது வீடுகளில் அவற்றிக்கென்று தனி இடத்தையும் அமைக்கின்றனர்.
ஷெட்பால் கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பாம்பிற்காக தனி இடத்தையே ஒதுக்கி வைத்திருப்பார்கள். குறிப்பாக நாகப்பாம்புகளுக்காக ஒரு மூலை ஒதுக்கப்படுகிறது. அந்த இடத்தில் பாம்புகள் வந்து வசித்துவிட்டு போகும்.
கிராமத்தில் உள்ள குழந்தைகளும் பாம்புகளுக்கு பயப்படுவதில்லை, ஏனெனில் பாம்புகளோடு தான் அவர்கள் வளர்கிறார்கள்.
குழந்தைகள் அவற்றுடன் விளையாடுவதோடு பாம்புகளை தங்களோடு பள்ளிக்கும் அழைத்துச் செல்கின்றனர்.
பாம்புகள் கிராமத்தில் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன, கிராமவாசிகள் யாரும் அவற்றைத் துன்புறுத்துவதில்லை.
அதேபோல பாம்புகளும் மக்களை எதுவும் செய்வதில்லை. புதிதாக அந்த கிராமத்துக்கு செல்பவர்களுக்கு தான் அதை பார்க்கும் போது வினோதமாகவும் பயமாகவும் இருக்கும் ஆனால் இந்த கிராம வாசிகளுக்கு அது சாதாரண விடயம்.