நாய்களின் மூக்கு ஏன் எப்பவும் ஈரமா இருக்குதுன்னு தெரியுமா?
பொதுவாகவே அனைவராலும் விரும்பப்படும் ஒரு செல்லப் பிராணியாக நாய் காணப்படுகின்றது. உலகில் விசுவாசம் என்ற வார்த்தைக்கு ஒரு உருவம் இருக்கிறது என்றால் இது நிச்சயம் நாயாக மட்டும் தான் இருக்க முடியும்.
நாய்கள் நமக்கு மிகவும் பரீட்சையமான பிராணியாக இருந்தாலும் நாயிடம் காணப்படும் சில வினோத பழக்கங்களும் நாயின் உடல் அமைப்பில் காணப்படும் சில விசேட அம்சங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
இந்த வகையில் நாயின் மூக்கு பகுதி எப்போதும் ஈரமாகவே இருக்கும்.இதற்கு என்ன காரணம் என்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா? நாய் எந்த ஒரு வாசனையையும் எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டது.
அறிவியல் காரணம் என்ன?
இதனால் தான் மோப்பம் பிடிக்கும் வேலைகளிலும் நாயை பயன்படுத்துகிள்றனர். இந்த ஆற்றலுக்கு முக்கிய காரணம் நாயின் மூக்கு பகுதியில் இருக்கும் ஈரத்தன்மை தான்.
நாய்கள் தங்களின் நீளமான நாக்கினால் மூக்கினை அடிக்கடி நக்குகின்றன. ஈரப்பதம் மோப்ப சக்திக்கு முக்கியமானதால், நாய் அடிக்கடி மூக்கினை நக்கி ஈரமாக்குகிறது.
மேலும் நாய் எல்லா இடங்களிலும் சென்று முகரும்போது அதனுடைய ஈரமான மூக்கில் துகள்கள் ஒட்டிக் கொள்கின்றன.
நாய் மூக்கினை அடிக்கடி நக்கும்போது மூக்கில் ஒட்டியுள்ள துகள்கள் சுத்தம் செய்யப்படுகின்றன. நாயானது ஈரமான புற்கள், செடிகள் உள்ளிட்ட தாவரங்களை முகரும் போது தாவரங்களில் உள்ள நீரால் நாயின் மூக்கு ஈரமாக இருப்பதாக பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றது.
ஆனால் நாய் மூக்கின் உட்புறத்தில் இருக்கும் ஒருவித சிறப்பு சுரப்பி தான் நாயின் மூக்கு எப்போதும் ஈரத்தன்மையுடன் இருப்பதற்கு காரணம்.
இந்த சுரப்பியின் பெயர் வேதியியல் ஏற்பிகள் (chemo receptors) என்பதாகும்.இக்கோழையானது நாசித் துளையை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருக்கிறது.
இந்த சுரப்பி நாயின் மூளையுடன் நேரடியாக தொடர்புப்பட்டுள்ளது. அதனால் தான் நாய்களால் எந்த வாசனையையும் எளிமையாக உணர முடிவதுடன் அதை நீண்ட நாட்கள் வரை நினைவில் வைத்துக்கொள்ளவும் முடிகின்றது.