மக்களே உஷார்..! ஜப்பானில் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பைஜீன்ஸ் பாக்டீரியா தொற்று அதிகரிப்பு..!
ஜப்பானில் கொரோனா வைரஸ் போலவே ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பைஜீன்ஸ் என்றழைக்கப்படும் மிகவும் ஆபத்தான பாக்டீரியாவின் தொற்று நோய் தற்போது அதிகரித்து வருவதாக சுகாதார துறை அறிவித்துள்ளது. இந்த பாக்டீரியாவால் ஏற்படும் தொற்று நோய் தீவிரமடைந்தால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இப்பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முதலில் தொண்டை வலியும், எரிச்சலும் உண்டாகும். பிறகு உடல்நல சிக்கல், சளி, தொண்டை அழற்சி, அடிநா அழற்சி, நிமோனியா, மூளைக் காய்ச்சல் ஆகியவை ஏற்படும்.
மேலும் இந்நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உடலுறுப்பு செயலிழப்பு மற்றும் உடல் நலிவு ஏற்படும். இதன் மூலம் இதுவரை குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நோய் தொற்றானது ஜப்பானின் 45 மாகாணங்களில் அடையாளம் காணப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இப் பாக்டீரியா தொற்று மூலம் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டும் 378 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக NIID வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தொற்று நோய் பரவுவதற்கான காரணத்தை கண்டறிய இயலாமல் மருத்துவ அதிகாரிகள் திணறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.