பா.ஜ.க.வில் இணைந்தார் பிரபல பாலிவுட் பின்னணி பாடகி அனுராதா பட்வால்..!
இந்தி திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகி அனுராதா பட்வால். இவர் கடந்த 2017-ம் ஆண்டு இந்திய அரசின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்றார். மேலும் தேசிய விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், பாராளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாடகி அனுராதா பட்வால் நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அர்ஜுன் சிங் முன்னிலையில் அனுராதா பட்வால் பா.ஜ.க.வில் இணைந்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனுராதா பட்வால், பிரதமர் மோடியின் ஆட்சி சிறப்பாக உள்ளதாகவும், பா.ஜ.க.வில் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.