ஏப்.24 முதல் விண்ணப்பிக்கலாம் : 2,553 டாக்டர்களுக்கு வேலை..!

தமிழ்நாடு அரசு மருத்துவத் துறைகளில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பதவிகளில் காலியாக உள்ள 2,553 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஏப்ரல் 24 முதல் மே 15ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். பல்கலைக்கழக மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

மேலும் மெட்ராஸ் மெடிக்கல் பதிவு சட்டம் 1914ன் படி பதிவு செய்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 12 மாதங்களாவது அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி இருக்க வேண்டும். இந்த பணிக்கு ரூ.56,100- 1,77,500 சம்பளம் வழங்கப்படும். கணினி மூலமாக தேர்வு நடத்தப்படும். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். காலிப்பணியிடங்கள் விநியோகம் பின்னர் அறிவிக்கப்படும். கொரோனா காலத்தில் பணியாற்றிவர்களுக்கு ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்படும். www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *