இது தெரியுமா ? காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்த பிறகு இரண்டு நுங்குகளை சாப்பிட்டு வந்தால்…

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உணவு கட்டுப்பாட்டுடன், நுங்கை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

நுங்கில் உள்ள நீரானது பசியை தூண்டும். மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கு நுங்கு அருமருந்தாகும். சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக, அதிக தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அப்படியானவர்கள் நுங்கை சாப்பிட்டால் தாகம் அடங்கிவிடும்.

ரத்தச்சோகை உள்ளவர்கள் தொடர்ந்து நுங்கை சாப்பிட்டு வந்தால், விரைவில் குணமாகி உடல் சுறுசுறுப்பாகும். வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது நுங்கு. அதேபோல் பதநீரும் நம் ஊர் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற, மிகச் சிறந்த இயற்கை பானம். உடல் உஷ்ணத்தை உடனே தணித்து உடலைக் குளிரவைக்கும் தன்மை கொண்டது.

வெயில் காலத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளில் இருந்தும், நம் உடலை பாதுகாக்கும் சத்துக்கள் இதில் அதிகம். பேன் தொல்லை இருப்பவர்கள், பதநீரைத் தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.

நுங்கை இளநீருடன் ஜூஸ் போல அருந்தலாம். சருமமும் உடலும் பொலிவடையும். பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டியுடன், சுக்கு சேர்த்துச் சாப்பிட்டால், நன்றாக பசி எடுக்கும்.

சுக்கு, மிளகு, கருப்பட்டி சேர்த்து, குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் தாய்ப் பால் நன்கு சுரக்கும். குழந்தைக்கும் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும். நுங்கை மசித்து வியர்க்குரு கட்டிகள் இருக்கும் இடத்தில் பூசினால் விரைவில் சரியாகும்.

நுங்கை அரைத்து தேங்காய்ப் பால் சேர்த்துக் குடித்தால் அல்சர், வயிற்றுப்புண் பிரச்சினைகள் தீரும். இப்படி ஏராளாமான நன்மைகள் நுங்கில் இருக்கின்றன.

கோடையில் வாட்டி வதைக்கும் அம்மை நோய்கள் வராமல் தடுக்க நுங்கு பயன்படுகிறது. உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பவர்கள் எளிதில் சின்னம்மை, பெரியம்மை, தட்டம்மை போன்ற நோய்களுக்கு உள்ளாவார்கள்.சீதோஷ்ண நிலையால் உடல் சூடாகி பித்தம் அதிகமாகி அதனோடு கபமும் சேர்ந்து கிருமித்தொற்று உண்டாவதன் மூலம் அம்மை வருகிறது. இவை 7 நாட்கள் முதல் 15 நாட்கள்வரை இருக்கும் என்றாலும் இந்த நாள்கள் உபாதையாக இருக்கும். இந்த நீர் கொப்புளங்கள் சுருங்க சுருங்க உடலில் அரிப்பை ஏற்படுத்தும், அரிப்பு தாங்காமல் சொரிந்து விடுவதால் அங்கு மீண்டும் அம்மை கொப்புளங்கள் உருவாகும். அம்மை கண்டவர்கள் தினமும் நுங்கை சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் குளிர்ச்சி அடையும். கொப்புளங்களின் மீது நுங்கு நீரை தடவி வருவதன் மூலம் கொப்புளங்கள் குளிர்ச்சியடைந்து அரிப்பை உண்டாக்காமல் இருக்கும். கோடை துவங்கும் போதே தினமும் நுங்கு சாப்பிட்டு வந்தால் அம்மை நோய் பெரும்பாலும் நெருங்காமல் செய்துவிடலாம்.

உடலில் அதிகபடியாக வியர்வை வெளியேறுவதால் உடலில் வழக்கத்தை விட அதிகப்படியான நீர்ச்சத்து குறைபாடு உண்டாகும். அதை தவிர்க்கவே பழங்கள், நீர்ச்சத்து மிக்க காய்கறிகளை எடுத்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். ஆனால் சற்று காரமான உணவு வகைகளாலும், வயிற்றுபிரச்சனை, செரிமானக்கோளாறு, நீர்ச்சத்து குறைபாடாலும் மலச்சிக்கல் பிரச்சனையும் சந்திக்க நேரிடும். காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்த பிறகு இரண்டு அல்லது மூன்று நுங்குகளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் காணாமல் போகும். குடல் இயக்கத்தை சீராக செயல்பட வைக்க நுங்கு உதவுகிறது.

உண்வுக்குழாய், இரைப்பை, சிறுகுடலின் உட்சுவரில் உருவாகும் ஒரு வகை புண். அல்சரால் அவதிப்படுபவர்கள் கோடையில் உணவு முறையில் கவனமாக இல்லாவிட்டால் மேலும் அதிக வீரியத்துக்கு உள்ளாவார்கள். உணவு பழக்கம் மூலமே இதை பெரும்பாலும் குணப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மிதமான கார உணவுகளும் கூட வெயில் காலங்களில் அதிகப்படியான உபாதையை உண்டாக்கும். தினமும் நுங்கு எடுத்துகொள்வதன் மூலம் அல்சர் தீவிரமாகாமல் கட்டுப்படுத்தமுடியும். வயிற்றுப்புண், குடல்புண் ஆறுவதற்கும் வாய்ப்புண்டு.கல்லீரலில் இருக்கும் நச்சை நீக்கி கல்லீரலையும் சுத்தம் செய்ய உதவுகிறது. குடலில் இருக்கும் கழிவுகளும் வெளியேற்றும். நெஞ்சு முதல் வயிறு வரை எரிச்சல் இருந்தாலும் நுங்கு இதமான குளுமை தரும்.

கருவுற்றிருக்கும் பெண்கள் கர்ப்பக்காலத்தின் போது கோடையை சந்தித்தால் தவிர்க்காமல் நுங்கு சேர்க்க வேண்டும். இதனால் கர்ப்பக்காலத்தில் செரிமானப்பிரச்சனை நீங்கும். வாந்தி மற்றும் குமட்டல் உணர்வும் உண்டாகாது. நெஞ்செரிச்சல், அஜீரணக்கோளாறுகள், மலச்சிக்கல் போன்ற வழக்கமான பிரச்சனைகளின் தீவிரம் கட்டுக்குள் இருக்கும்.

புற்றுநோயில் கருப்பை வாய் புற்றுநோய்க்கு அடுத்ததாக பெண்கள் மார்பக புற்றுநோய்க்கு தான் அதிகம் ஆளாகிறார்கள் என்கிறது ஆய்வு. மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க உதவும் ஆன் தோசயனின் என்னும் வேதிப்பொருள் நுங்கில் இருக்கிறது. இந்த ஆன் தோசயனின் என்னும் வேதிபொருளானது புற்றுநோய் செல்கள் மற்றும் அது உருவாக்கும் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது. பெண்கள் நுங்கு கிடைக்கும் சீஸனில் அதிக அளவில் எடுத்துகொள்வதன் மூலம் சிறந்த பயனை அடையமுடியும். கூடுதலாக இவை இதய நோய்களையும் குறைக்கின்றன.

அதிகப்படியான வெப்பத்தால் சருமத்தில் வறட்சி, எரிச்சல், சரும வியாதி பொதுவாக பாதிப்புக்குள்ளாக்கும். குறிப்பாக கோடைக்காலத்தில் பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவரும் வியர்க்குரு பிரச்சனைக்கு உள்ளாவதுண்டு. நுங்கு சாப்பிடுவதோடு அவ்வபோது வியர்க்குருவின் மீது தடவி வந்தாலும் வியர்க்குரு மறையும். அதே போன்று வெயிலால் வரும் சூட்டு கொப்புளங்களும் கூட நுங்கு தடவி பூசுவதன் மூலம் எரிச்சல் இல்லாமல் சரியாகும். மீண்டும் இவை வரவும் செய்யாது.

அதிக எடை கொண்டிருப்பவர்கள் உடல் எடையை குறைக்க பலவிதமான டயட் மேற்கொள்வதுண்டு. அதை கோடைக்காலங்களிலும் கடைபிடிக்கும் போது உஷ்ணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரக்கூடும்.

இவர்கள் தினமும் 3 நுங்கை அரை டம்ளர் நீரில் ஊறவைத்து நன்றாக மசித்து வேண்டிய அளவு நீர் விட்டு குடித்துவரலாம். டயட் பிரச்சனையால் உடலுக்கு வரக்கூடிய உஷ்ணப்பிரச்சனைகள் வராமல் இருக்கும். அதோடு நுங்கில் இருக்கும் கனிமச்சத்தும், ஊட்டச்சத்தும் உடலில் குளுக்கோஸ் அளவை சீராக வைத்து உடலை சோர்வின்றி சுறுசுறுப்பாக வைத்திருக்கும். கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையையும் குறைக்க உதவும். குறைந்த கலோரி கொண்டிருப்பதால் இவை நீண்ட நேரம் உங்கள் பசியை ஊக்குவிக்காது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *