இன்னும் 24 மணி நேரத்தில் சனி உதயம்.. இந்த ராசிகளுக்கு நல்ல நாட்கள் ஆரம்பிக்கும்
நியாய தேவன் சனி பகவான் மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கப்பவர். தற்போது சனி பகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். நாளை அதாவது மார்ச் 18 சனி கும்பத்தில் உதயமாகப் போகிறார். இந்த நிகழ்வு சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கப் போகிறது. இப்படிப்பட்ட நிலையில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனியின் உதயத்தால் சுப பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷ ராசிக்காரர்களுக்கு சனி உதயம் நன்மையை உண்டாகும். வீண் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். திருமண வாழ்க்கையில் கவனம் தேவை. மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் உதயத்தால் சமூகத்தில் முன்னேற்றம் கிடைக்கும். கடின உழைப்புக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வியாபாரம் செழிப்பாக நடைப்பெறும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகளைப் பெறலாம்.
மிதுன ராசிக்காரர்களுக்கு சனி உதயத்தால் திடீர் பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். தந்தையின் உடல்நலம் பாதிப்படையலாம்.
கடக ராசிக்காரர்களுக்கு சனியின் உதயத்தால் வாழ்வில் நேர்மறையான பலனைப் பெறுவீர்கள். உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். பெரிய நோய்க்கு ஆளாக நேரிடும். சனியின் தாக்கம் உங்கள் மீதும் இருப்பதால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனியின் உதயத்தால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் வெற்றி பெறுவீர்கள். தொழில் சம்பந்தமான வெளிநாடு பயணம் மேற்கொள்ளலாம். வாழ்க்கைத் துணைஉய்ன் ஆதரவைப் பெறுவீர்கள்.
கன்னி ராசிக்காரர்களுக்கு சனியின் உதயத்தால் உடல்நலம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். சட்ட தகராறில் சிக்கிக் கொண்டு இருந்தால் இப்போது வெற்றி கிடைக்கும். வேலையில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். தொழிலில் வெற்றியை அடைய முடியும். நீண்ட பயணத்தை மேற்கொள்ளலாம்.
துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் உதயத்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். ஆசைகள் நிறைவேறும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படலாம். உத்தியோகத்தில் மாற்றங்களை காணலாம். மனைவியிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். நிதி நன்மைகளைப் பெறலாம்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் உதயத்தால் உடல் நலம் பாதிக்கப்படலாம். குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். தொழிலை சரியாக கண்காணிக்க வேண்டும். சொத்து மூலம் லாபத்தையும் பெறலாம். அதிக உழைப்பும் தேவை. சகோதர சகோதரிகளுடன் தகராறு ஏற்படலாம்.
தனுசு ராசிக்காரர்களுக்கு சனி உதயத்தால் பலன் கிடைக்கும். பயணங்களால் ஆதாயமடைவீர்கள். வெளிநாடு செல்லலாம். அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள், ஆனால் அதற்கு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். செலவுகள் வெகுவாக குறையும்.
மகர ராசிக்காரர்களுக்கு சனியின் உதயத்தால் பண பலன் உண்டாகும். நிதி நிலை முன்பை விட வலுவாக இருக்கும். வங்கி இருப்பு படிப்படியாக அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். உயர் பதவியையும் பெறலாம். சொத்து போன்றவற்றையும் வாங்கலாம்.
கும்ப ராசியில் சனி உதயம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழப் போவதால் ஆளுமையில் கவனம் செலுத்த வேண்டும். பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவார்கள். சுறுசுறுப்பாக உணர்வீர்கள். வேலையில் வெற்றி பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண்பீர்கள். பயணம் மூலம் வெற்றியை அடைவீர்கள்.
மீன ராசிக்காரர்களுக்கு சனியின் உதயத்தால் ஆசைகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினரின் உடல்நிலை மோசமடையலாம். உடல்நலத்தில் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடலாம். ஏழை மக்களுக்கும் சிறப்பு தானம் செய்யுங்கள். மேலும் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள்.