Lucky Rasis: செவ்வாயும் சுக்கிரனும் கொட்டப் போகும் ராசிகள்
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடிய ஒரு சுக்கிர பகவான் இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். ஒரு ராசியில் இவர் உச்சம் பெற்றால் அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகிறார்.
நவக்கிரகங்களில் மங்கள கிரகங்களில் ஒன்றாக விளங்கக்கூடியவர் செவ்வாய் பகவான். இவர் தன்னம்பிக்கை, தைரியம், மன உறுதி உள்ளிட்டவர்களுக்கு காரணியாக விளங்கி வருகிறார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றுவார்.
செவ்வாய் பகவான் தற்போது விருச்சிக ராசிக்குள் பயணம் செய்து வருகிறார். கடந்த டிசம்பர் 25ஆம் தேதி சுக்கிர பகவான் விருச்சிக ராசியில் நுழைந்தார். இவர்கள் இருவரும் நட்பு கிரகம் என்பதால் இவர்களுடைய சேர்க்கை நன்மைகளை கொடுத்து வருகிறது. செவ்வாய் மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை பெறப்போவது மூன்று ராசிகளை இங்கே காண்போம்.
மிதுன ராசி
செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும்.
சிம்ம ராசி
உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை உருவாக்கியுள்ளது. குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை தரும். உயர் அலுவலர்களால் மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். வியாபாரம் மற்றும் தொழில் நல்ல லாபத்தை பெற்று தரும்.
விருச்சிக ராசி
செவ்வாய் மற்றும் சுக்கிரன் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். மாணவர்கள் கல்வியை சிறந்து விளங்குவார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். பெற்றோரின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும்.