எங்களால் முடியாததை நீங்க பண்ணிட்டீங்க! ஆர்சிபி மகளிர் அணிக்கு வீடியோ காலில் விராட் கோலி வாழ்த்து
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் ஐபிஎல் உள்ளிட்ட டி20 தொடர்களில் கடந்த 17 ஆண்டுகளில் முதல்முறையாக rcb அணி கோப்பையை வென்றிருக்கிறது.
டெல்லியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 18.3 ஓவரில் 113 ரன்களில் அனைத்து விக்கெட் களையும் இழந்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஆர் சி பி அணி அபாரமாக விளையாடி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
இதனை அடுத்து ஆர் சி பி அணி ரசிகர்கள் தற்போது உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். ஆர் சி பி ஆடவர் அணியால் சாதிக்க முடியாத விஷயத்தை மகளிர் அணி சாதித்து விட்டதாக பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் எந்த ஒரு ஈகோவும் இன்றி ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர்களும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
உடனடியாக வீடியோ கால் செய்த விராட் கோலி மைதானத்திலேயே வீராங்கனைகள் ஒவ்வொருவரிடமும் வாழ்த்து தெரிவித்து உற்சாகப்படுத்தினார். இதன் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. விராட் கோலியின் இந்த செயலை பாராட்டியுள்ள ரசிகர்கள் மகளிர் அணி போலவே ஆண்கள் அணியும் இம்முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாதனை படைக்க வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
ஆர்சிபி அணி கோப்பையை வென்றவுடன் பெங்களூருவில் ரசிகர்கள் உற்சாகமாக அதனை கொண்டாடி வருகிறார்கள். சாலையில் ரசிகர்கள் ஊர்வலமாக சென்று ஈ சாலா கப் நம்தே என்று கொண்டாடி வருகிறார்கள். சமூக வலைத்தளங்களிலும் ஆர் சி பி அணி கொண்டாட்டம் தான் ஆக்கிரமித்து இருக்கிறது. மகளிர் அணியை போலவே ஆடவர் அணியும் கோப்பையை வென்று 17 ஆண்டுகால ரசிகர்களின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆர்சிபி அணி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணி உடன் என்பது குறிப்பிடத்தக்கது.