Land Rover கார் மோதி 57 வயது பிரித்தானிய முதியவருக்கு நிகழ்ந்த பரிதாபம்!

பிரித்தானியாவில் லேண்ட் ரோவர் கார் மோதிய விபத்தில் 57 வயது முதியவர் உயிரிழந்ததை தொடர்ந்து பொலிஸார் மரண விசாரணையை தொடங்கியுள்ளனர்.

கார் மோதிய விபத்து
பிரித்தானியாவின் Manchester பகுதியில் Land Rover கார் ஒன்று மோதிய விபத்தில் 57 வயது முதியவர் உயிரிழந்தார்.

சனிக்கிழமை காலை 11 மணியளவில் Beswick பகுதியின் Olympic சாலையில் முதியவர் ஒருவர் சுயநினைவற்று இருப்பதாக கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மற்றும் அவசர சேவை பிரிவினர், 57 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட முதியவரை கருப்பு நிற Land Rover இடித்து இருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் நம்புகின்றனர்.

அத்துடன் இதில் முதியவர் உயிரிழந்ததை தொடர்ந்து மான்செஸ்டர் பொலிஸார் கொலை விசாரணையை தொடங்கியுள்ளனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *