அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு மூவர் பலி
அமெரிக்காவின் வடக்கு பிலடெல்பியா புறநகர் பகுதியான லெவிட்டவுனில் உள்ள ஒரு வீட்டுக்கு முன் இளைஞரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 3 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் போது, குறித்த இளைஞர் அங்கிருந்த 55 வயது பெண் மற்றும் 13 வயது சிறுமி ஆகிய 2 பேரை சுட்டுக்கொன்ற பின்னர் வீட்டில் இருந்து வெளியே வந்து மேலும் ஒரு பெண்ணை சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகள்
இது குறித்து தகவலறிந்து பொலிஸார் தப்பி ஓடிய இளைஞரை பிடிக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் நியூ ஜெர்சி நகரில் மறைந்திருந்த அந்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் பொலிஸாரின் விசாரணையில் அவர் ஆண்ட்ரே கார்டன் (வயது 26) என்பதும் அவர் தனது வளர்ப்புத்தாய் மற்றும் சகோதரியை சுட்டுக் கொன்றதும் தெரிய வந்துள்ளது.
டிராண்டன் பகுதியில் கார் ஒன்றை திருடிய அந்த இளைஞன் லெவிட்டவுன் பகுதிக்கு சென்று தனது உறவினர்களை சுட்டுக் கொன்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.