இது தெரியுமா ? கண் எரிச்சல், கண் வலி இருப்பவர்கள் காலையில் நுங்கு சாப்பிட்டு வந்தால்…
நுங்கு ஒரு குறைந்த கலோரிகள் கொண்ட பழமாகும். உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது நன்மை பயக்கும்.கோடைகாலத்தில் ஏற்படும் உடல் எரிச்சலை நுங்கு தணிக்கிறது. சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை குணப்படுத்துகிறது.உடல் சோர்வை போக்குகிறது. வியர்குரு, அரிப்பு போன்றவற்றை சரிசெய்கிறது. பால்வினை நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது.
கோடைகாலம் வந்து விட்டாலே உடல் சூட்டினால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்ப்படக் கூடும். இந்நிலையில் வெயில் காலத்தில் நுங்கு வரத்தும் அதிகரித்துவிடும். எங்கு பார்த்தாலும் நுங்கு வியாபாரம் களைகட்டத் தொடங்கும். மக்களும் வெயில் சூட்டை தனிக்க, தாகத்தைத் தனிக்க நுங்கு உண்பார்கள். அதற்காக மட்டுமல்லாமல் அது உடலுக்கு இன்னும் பல நன்மைகளைக் கொடுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
கோடைகாலத்தில் தாகம் தணியவும், சூடு குறையவும் நுங்கு அற்புதமான உணவு. இதனால் நீர்கடுப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம்.
அதிக சூட்டால் கண் எரிச்சல், கண் வலி இருப்பவர்கள் காலையில் நுங்கு சாப்பிட்டு வந்தால் கண் பிரச்சினைகள் சரியாகும்.
நுங்கின் மேலே உள்ள துவர்ப்பு சுவை கொண்ட தோல்பகுதியில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்டமின் பி ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது.
நுங்கின் சத்துகள் அதீத பசி உணர்வை கட்டுப்படுத்தி நீர் சுரப்பினை அதிகப்படுத்துவதால் உடல் எடை குறைக்க உதவுகிறது.
பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க நுங்கில் உள்ள ஆன்தோசயன் பெரிதும் உதவுகிறது.
ஒற்றைத் தலைவலி என்பது தலைவலிகளில் மிகவும் வேதனையான ஒன்று. பனை வெல்லத்தில் உள்ள இயற்கையான மருத்துவ குணம் இந்த வலியைக் குறைக்க உதவுகிறது. 1 டீஸ்பூன் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். நுங்கு, பனை வெல்லம் ஆகியவற்றால் ஒற்றைத் தலைவலியில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள்.
கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் பிரச்சினைகளை நுங்கு கட்டுப்படுத்துகிறது.
கடின உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சகலருக்கும் தேவையான அத்தியாவசியமான சத்துக்கள் நுங்கில் உள்ளது.
நுங்குவில் இருந்து எடுக்கப்பட்ட நீரில் மெல்லிய பருத்தி துணியை நனைத்து எடுக்கவும். இதை கண்களில் மேல் பற்றாக வைக்கும்போது கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மை மறையும். கண்களில் ஏற்படும் சோர்வு சரியாகும்.கண் நோய்களுக்கு நுங்கு நீர் பலன் தருகிறது. அற்புதமான மருந்தாக விளங்கும் நுங்கு, உடலுக்கு குளிர்ச்சி தருகிறது. தோல் மீது ஏற்படும் கொப்புளங்களை மறைய செய்கிறது.
மோருடன் இளம் நுங்கு, உப்பு சேர்த்து கலந்து குடித்தால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு குணமாகும். உஷ்ணத்தால் ஏற்படும் வெள்ளைப்போக்கு சரியாகும். நுங்குவின் தோலில் உள்ள துவர்ப்பு தன்மை வயிற்றுப் போக்கை சரி செய்யும். கோடை காலத்துக்கு ஏற்ற உணவான நுங்கை சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை கிடைக்கிறது.
உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்துவதில் நுங்கு வல்லமை கொண்டது. உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
வயிற்று கோளாறுகளை சரி செய்வதில் நுங்கு நல்ல பலனை தரும். மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகிய இரண்டு பிரச்சனைகளுக்கும் நுங்கு சாப்பிடலாம். குடல் புண்ணை குணமாக்கிவிடும்.
உடல் சூட்டினால் கடுமையாக அவதிப்பட்டு நீர்ச்சத்தை இழந்து வேதனைப்படுபவர்களுக்கு, நுங்கு அருமருந்து. இதை சாப்பிடும் போது தாகம் தணியும்.
ரத்த சோகை இருப்பவர்கள் நுங்கு சாப்பிட்டால் நல்ல பலனை காண்பார்கள்.
வயிற்றில் குழந்தைகளை சுமக்கும் கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால் அவர்களுடைய செரிமானம் துரிதமாகும். மலச்சிக்கல், அசிடிட்டி ஆகிய பிரச்சனைகள் இருந்தால் கூட அதிலிருந்து விடுபடுவார்கள்.
கோடைகால வேர்க்குருவை நீங்க செய்யும். நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீர்ச்சத்து அதிகமாகும். வெயிலினால் உண்டாகும் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும். வெயில் காலங்களில் ஏற்படும் கொப்புளங்களையும், தோல் நோய்களயும் நுங்கு தடுக்கும்.
கல்லீரல் பிரச்னை, அஜீரணக் கோளாறு ஆகிய பிரச்னைகளுக்கு நுங்கு நல்லது.