தீராத மூட்டு வலியை ஒரே நாளில் குணமாக்கும் மேஜிக் இதோ..!!
மூட்டு வலி இன்றைய காலகட்டத்தில் சாதாரண ஒன்றாகிவிட்டது. இந்த மூட்டு வலி பாதிப்பு ஏற்பட்டால் நீண்ட தூரம் நடப்பதில் சிரமம், நீண்ட நேரம் நிற்க முடியாமல் சிரமம், படி ஏறுவதில் சிரமம் உள்ளிட்டவைகளை சந்திக்க நேரிடும்.
இந்த மூட்டு வலி பாதிப்பை சரி செய்ய ஆயிரக் கணக்கில் செலவு செய்யாமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிதில் குணப்படுத்திக் கொள்ளுங்கள்.
தீர்வு 01:-
வெதுவெதுப்பான கடுகு எண்ணெயில் சிறிது சூடத்தை சேர்த்து கலந்து மூட்டுகளில் தேய்த்தால் மூட்டு வலிக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.
தீர்வு 02:-
ஒரு டம்ளர் நேரில் சிறிது சுக்குத் தூள் சேர்த்து கொதிக்க விட்டு தேன் கலந்து அருந்தினால் மூட்டு வலி குணமாகும்.
தீர்வு 03:-
வெண்டைக்காயை பொடியாக நறுக்கி மோரில் ஊற வைத்து வெயிலில் உலர்த்தி சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குணமாகும்.
தீர்வு 04:-
ஐந்து ஜாதிக்காயை இடித்து பொடியாக்கி 100 மில்லி வேப்ப எண்ணெயில் கலந்து சூடாக்கி மூட்டுகளில் தேய்த்து வந்தால் மூட்டு வலி குணமாகும்.
தீர்வு 05:-
உருளைக்கிழங்கை நன்கு மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு டம்ளர் நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூட்டு வலி குணமாகும்.
தீர்வு 06:-
ஒரு ஸ்பூன் கருப்பு எள்ளை ஒரு இரவு தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அதை அருந்தி வந்தால் மூட்டு வலி குணமாகும்.
தீர்வு 07:-
காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து அருந்தி வந்தால் மூட்டுவலி பாதிப்பு சில தினங்களில் குணமாகும்.