மகன் குறித்து ரசிகர் கேட்ட கேள்வி: எமோஷனல் ஆன வனிதா விஜயகுமார்

பிக்பாஸ் பிரபலம் வனிதா விஜயகுமார் இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் உரையாடிய போது ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் வழங்கிய பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வனிதா விஜயகுமார்
விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்போது சின்னத்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை வனிதாவுக்கு பிக்பாஸ் தான் மிகப்பொரும் விளம்பரமாக அமைந்தது.

நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதியின் மகள் வனிதாவுடன் அவருடைய குடும்பத்தினர்கள் யாரும் பேசுவது கிடையாது என்பது ஊர் அறிந்த ரகசியம் தான்.

இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவியது. இதனால் கடுமையான விமர்சனங்களையும் வனிதா சந்தித்தார்.

ஆனால் அதன் பின் சில கருத்து வேறுபாடுகளால் இந்த திருமணத்தைில் இருந்தும் விவாகரத்து பெற்றார். கடந்த வருடம் பீட்டர் பால் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது தன்னுடைய குடும்பத்தை பிரிந்து தன்னுடைய இரண்டு மகள்களையும் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவின் மகள் ஜோவிகாவும் பங்குப்பற்றியிருந்தார்.

தன்னுடைய மகள் ஜோவிகாவை எப்படியாவது கதாநாயகியாக ஆக்கிவிட வேண்டும் என்ற முயற்சியில் தற்போது தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றார்.

இந்நிலையில் அண்மையில் இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் உரையாடிய வனிதா விஜயகுமாரிடம் ரசிகர் ஒருவர் உங்களின் மகனான ஸ்ரீஹரியை (ஆகாஷிற்கு பிறந்த மகன்) உங்களுக்கு எவ்ளோ பிடிக்கும் ? அவர் உங்களுக்காக திரும்ப வருவாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு வனிதா நீங்கள் யாரவையாது உண்மையாக நேசித்தால், அவர்களை அப்படியே விட்டு விடுங்கள். அது உங்களிடம் மீண்டும் வந்தால் அது உங்களுடையது. இல்லை என்றால் அது உங்களுடையது இல்லை” என்று எமோஷனலாக பதிலளித்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *