இனி வருமான வரித்துறையால் 24 மணி நேரமும் செயல்படும்..!
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் பறக்கும் படைகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
இது போன்று 702 நிலையான கண்காணிப்பு குழுவினரும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு மூன்று பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் என்ற அடிப்படையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, மக்களவை தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறையால் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தனி நபரோ, கட்சியோ, நேரசியாகவோ, மறைமுகமாகவோ பணம் இலவச பொருள் விநியோகித்தால் புகார் தெரிவிக்கலாம் என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் தகவல்களை வருமான வரி அலுவலகத்தில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண், மின்னஞ்சல், வாட்ஸ்ஆப் மூலம் தெரிவிக்கலாம் எனவும், தகவலை பகிர்ந்து கொள்வோரின் பெயர்கள், விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் கட்டணமில்லா எண் – 18004256669, மின்னஞ்சல் tn.electioncomplaints2024@incometax.gov.in 9445394453 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம் என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.