பள்ளி மாணவர்களுக்கு அதிகமான நாட்கள் விடுமுறை ?
மக்களவை தேர்தல் ஆனது நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அதே சமயம் தமிழகத்தில் பள்ளிகளில் தேர்வு நடைபெறுவது குறித்த அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வானது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகிறது.
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வானது ஏப்ரல் 19ம் தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பல தனியார் பள்ளிகள் மார்ச் 29 ஆம் தேதியுடன் தேர்வுகள் முடிவடையும் வகையில் அட்டவணை தயாரித்துள்ளது. மேலும் சில பள்ளிகள் மார்ச் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி முடிவடையும் வகையில் தேர்வு அட்டவணை தயாரித்துள்ளன. இந்நிலையில் மாணவர்களுக்கு கட்டாயம் கூடுதல் விடுமுறை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.