திமுக – அதிமுகவுக்கு அதிக நன்கொடை கொடுத்தது யார் தெரியுமா?
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கிய புதிய தகவல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்த விவகாரம் தற்போது நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. அதிக பட்சமாக பாஜக ரூ.6000 கோடிக்கு மேல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்றுள்ளது. அதில், 2019-20ல் மட்டும் ரூ.2,555 கோடி தேர்தல் நிதியாக பாஜக பெற்றிருப்பதை எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். பாஜகவுக்கு அடுத்தபடியாக திரிணாமுல் ரூ.1,610 கோடியும், காங்கிரஸ் ரூ.1,422 கோடியும் தேர்தல் பத்திரங்கள் திரட்டியுள்ளது. இதுவரை தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதியை பெற்ற பாஜக எவ்வளவு தொகையை யாரிடம் இருந்து பெற்றுள்ளது என தகவல் வெளியாகவில்லை.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின் படி தமிழகத்தின் எதிர்கட்சியான அதிமுக மொத்தம் ரூ.6.05 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக பெற்றுள்ளது.
அதன் முழு விபரம்
1.லட்சுமி மெஷின் வொர்க்ஸ் நிறுவனத்திடம் – ரூ 1. கோடி
2.சென்னை சூப்பர் கிங்ஸ்(இந்தியா சிமெண்ட்ஸ்) – ரூ. 4 கோடி
3.கோபால் சீனிவாசன் என்பவரிடம் – ரூ.5 லட்சம்
இவர்களிடமிருந்து கடந்த 12-04-2019 முதல் 15-04-2019 வரை அதிமுக நன்கொடை பெற்றுள்ளது.
தேசிய கட்சிகளான சி.பி.எம்., சி.பி.ஐ, பகுஜன் சமாஜ் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்த நன்கொடையும் வாங்கவில்லை என்பது பொதுமக்களிடையே கவனம் பெற்றுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுக ரூ.656.5 கோடி நன்கொடை பெற்றிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கிய புதிய தகவல்களை தேர்தல் ஆணையம் இன்று மாலை வெளியிட்டது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில்படி ஆளும் திமுக மொத்தம் ரூ.656.5 கோடி பல்வேறு தனியார் நிறுவங்களிடம் இருந்து தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடையாக பெற்றுள்ளது.
திமுக வாங்கிய நன்கொடையின் முழு விபரம் வருமாறு,
லாட்டரி மார்ட்டின் கேமிங் நிறுவனத்திடம் திமுக பெற்ற நன்கொடை – ரூ.509 கோடி
மெகா கட்டுமான நிறுவனத்திடம் – ரூ.105 கோடி
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திடம் – ரூ.14 கோடி
சன் நெட்வொர்க் நிறுவனத்திடம் – ரூ.10 கோடி
திரிவேனி நிறுவனத்திடம் – ரூ.8 கோடி
ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்திடம் – ரூ.5 கோடி
ஐ.ஆர்.பி நிறுவனத்திடம் – ரூ.2 கோடி
LMW நிறுவனத்திடம் – ரூ.1.5 கோடி
அப்பலோ– ரூ.1 கோடி
பிர்லா நிறுவனத்திடம் – ரூ.1 கோடி
2019-2024-ம் ஆண்டுகள் வரை தேர்தல் பத்திரம் மூலம் திமுக பெற்ற நன்கொடையின் விவரம் வருமாறு,
2019-20 – ரூ.45.5 கோடி
2020-21 – ரூ. 80 கோடி
2021-22 – ரூ.306 கோடி
2022-23 – ரூ.185 கோடி
2023 ஏப்ரல் – 2024 பிப்ரவரி வரை – ரூ.40 கோடி
மொத்தம் – ரூ.656.5 கோடி