தமிழக மக்களுக்கு நற்செய்தி சொன்ன சென்னை வானிலை ஆய்வு மையம்..! அடுத்த 2 நாட்களுக்கு…
தமிழகத்தில் வெயில் நாளுக்கு நாள் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. வரும் ஏப்ரல், மே மாதங்களில் கத்திரி வெயில் தாக்கும் என்பதால், வெப்பம் இன்னும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானதுவரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரூர் பரமத்தியில் அதிகபட்ச வெப்பநிலையாக 39 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.