இன்னும் 16 நாட்களில் புதன் வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்
ஜோதிடத்தில், புதன் கிரகம் மிகவும் புத்திசாலித்தனமான கிராகமாகும். புதன் கிரகம் புத்திக்கூர்மை, கல்வி, பேச்சாற்றல், அறிவாற்றல், படைப்பாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ளார். அந்தவகையில் கிரகங்களின் இளவரசனான புதன் கிரகம் வருகிற ஏப்ரல் 2, 2024 ஆம் தேதி அன்று மேஷ ராசியில் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். புதன் வக்ர நிலையில் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலனும், சில ராசிக்காரர்களுக்கு கெட்ட பலனும் உண்டாக்கும். வேத ஜோதிடத்தின்படி, புதன் கிரகம் மேஷ ராசியில் வக்ர பெயர்ச்சி அடையப் போவதால், அதன் விளைவுகள் மிகவும் தீவிரமாக இருக்கும். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பண மழை, பதவி உயர்வு போன்றவற்றை கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
இந்த ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர பெயர்ச்சியால் பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
மிதுனம் (Gemini Zodiac Sign):
புதன் வக்ர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். அதுமட்டுமின்றி தொழிலில் சாதகமான வாய்ப்புகளை நீங்கள் பெறுவீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகளைப் பெறலாம். பணியிடத்தில் மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரம் பெருகும், இதனால் நிதி நிலை வலுவாக இருக்கும். வாழ்க்கையில் அனைத்து சுப பலன்களையும் பெறுவீர்கள். வருமானத்தில் அதிகரிப்பு காணலாம். முதலீடு மூலம் பணத்தை சேமிப்பீர்கள். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு விரும்பிய மதிப்பெண்கள் கிடைக்கும்.
சிம்மம் (Leo Zodiac Sign):
புதன் வக்ர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழிலில் வெற்றி கிடைக்கும். சாதகமான பலன் கிடைக்கும். நல்ல பலன்கள் உண்டாகும். பிரச்சனைகள் அனைத்தும் தேர்வு பெரும். வெற்றியை அடைவீர்கள். சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர பெயர்ச்சியால் மகத்தான வெற்றி கிடைக்கும். வியாபாரம் பெருகும், லாபம் கொட்டும். குடும்பத்தினரின் முழுமையாக ஆதரவைப் பெறுவீர்கள். உடல் நலம் நன்றாக இருக்கும். வாழ்க்கை துணையுடன் புரிதல் மேம்படும். பண வரவு அதிகரிக்கும். இந்த காலத்தில் கடின உழிப்பு இருந்தால், வெற்றியின் உச்சம் தொடலாம்.
கும்பம் (Aquarius Zodiac Sign):
புதன் வக்ர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் தரும். புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை கட்டாயம் பெறுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு லாப பலன் தரும். வரும் சவால்களை எளிதாக எதிர்கொள்வீர்கள். பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். வியாபாரத்தில் திடீரென லாபம் இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முழுமையான ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் உங்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.