18 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ராசிகள்! இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பலன்கள் கிடைக்கும்!
வேத ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் அதன் குறிப்பிட்ட நேரத்தில் ராசி மாறுகிறது. சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது இருப்பிடத்தை மாற்றி 12 ராசிகளையும் பாதிக்கிறது. மார்ச் 14 அன்று சூரியன் மீன ராசியில் நுழைந்துள்ளது. ராகுவானது ஏற்கனவே அதே இடத்தில் உள்ளது. மேலும் சூரியனுடன் ராகு இணைவது சில ராசிகளுக்கு நல்லது இல்லை, பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஆனால் ஜோதிடத்தில், சூரியன் மற்றும் ராகுவின் சேர்க்கை மிகவும் பலனளிக்கிறது. வியாழன் ராசியில் சூரியன் மற்றும் ராகு இணைந்ததால் சிலருக்கு கஜகேசரி யோகம் உருவாகிறது. அதன்படி, சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறை மற்றும் எதிர்மறை வடிவத்தில் காணப்படுகிறது. இந்த காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு குறிப்பாக பலன் அடைய போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ரிஷப ராசி
சூரியனின் இந்த இடம் மாற்றத்தால், ரிஷப ராசிக்காரர்கள் மகத்தான வெற்றியைப் பெற உள்ளனர். இந்த நேரத்தில், நீண்ட நாட்களாக சிக்கிய பணம் மீண்டும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். மேலும் வேளையில் பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், இடத்தை மாற்றுவதற்கு இந்த நேரத்தில் மிகவும் நல்லது. புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பும் உள்ளது.
மிதுன ராசி
இந்த சமயத்தில் மன அழுத்தத்திலிருந்து விடுபட வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் பாதகமான சூழ்நிலைகளில் இருந்தும் நிவாரணம் பெறலாம். நீண்ட நாட்களாக நடந்து கொண்டிருக்கும் பிரச்சனை முடிய வாய்ப்புள்ளது. வெளிநாட்டு குடியுரிமை பெற விரும்புபவர்களுக்கு வெற்றி கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
துலாம் ராசி
இந்த நேரத்தில் துலாம் ராசிக்கார்களுக்கு அதிக மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் கூடுதல் மகிழ்ச்சி நிகழும். நீங்கள் எதையாவது புதிய விஷயத்தை திட்டமிட்டால் அதில் வெற்றி நிச்சயம் கிடைக்கும். உங்கள் எதிரியாக இருப்பவர் கூட உங்களுக்கு ஒன்றாக நிற்பார்கள். அதே சமயம் யாருக்கும் கடன் கொடுக்க இது சரியான நேரம் கிடையாது. அதையும் மீறி கொடுத்தால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பும் உண்டு.
விருச்சிக ராசி
விருச்சிக ராசி மாணவர்கள் இந்த சமயத்தில் படிப்பிலும் போட்டியிலும் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. எனவே, இந்த நேரத்தில் படிப்பில் அதிகபட்ச கவனம் செலுத்துவது நல்லது. படித்து கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு இந்த காலகட்டத்தில் பெரிய வெற்றியை அடைய முடியும். இந்த சமயத்தில் குழந்தை குடும்ப உறுப்பினர்களால் மிகுந்த மகிழ்ச்சியைப் பெறுகிறது.
மகர ராசி
சூரிய பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமைய போகிறது. எனவே, இந்த நேரத்தில் எந்த வேலையைச் செய்ய நினைத்தாலும் அதில் வெற்றி நிச்சயம் கிடைக்கும். இந்த நேரத்தில் பல புதிய வேலை வாய்ப்புகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் கடின உழைப்பாலும் திறமையாலும் எந்த சூழ்நிலையையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். முடிந்தால் ஆன்மீக பணிகளில் ஆர்வத்தை வளர்த்து கொள்வது நல்லது.