Gut health: வயிற்றுப் பிரச்சனைகளுக்கு முடிவு கட்டும்… பவர்ஃபுல் மூலிகைகள்!
ஆரோக்கியமாக நூறாண்டுகள் வாழ, குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது முக்கியம். குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால், பலவிதமான நோய்கள் நம்மை அண்டாது. இதற்கு குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான பாக்டீரியாக்கள், உணவை ஜீரணிக்க உதவுவதோடு, ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கும், உடலில் இருந்து கழிவு பொருட்களை அகற்றவும் உதவுகிறது.
நம் குடலில், கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் உள்ளன. இவற்றில் பல வகையான பூஞ்சைகள், வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் அடங்கும். இவற்றில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பாக்டீரியாக்கள், உணவில் உள்ள கோப்பு ஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை உடைத்து, ஜீரணத்தை எளிதாக்குகின்றன. குடல் முழுமையாக ஊட்டச்சத்துக்களை கிரகித்துக் கொள்ளவும் இவை (Health Tips) உதவுகின்றன.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில மூலிகைகளை, உட்கொள்வதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை சிறப்பாக மேம்படுத்தலாம். ஆரோக்கியமான உடல் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும், ப்ரீ பயோடிக் மற்றும் ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள் நிறைந்த மூலிகைகள் பற்றி அறிந்து கொள்ளலாம். கூடுதலாக, இவை கெட்ட பாக்டீரியாவையும் நீக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மஞ்சள்
குர்க்குமின் நிறைந்த மஞ்சள் அழற்ச்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. இதனால் குடல் அழற்ச்சியை போக்கி ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது இதனால் வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். இரவில் பாலில் மஞ்சள் கலந்து கொதிக்க வைத்து அருந்துவதால், மஞ்சளின் பலனை முழுமையாக பெறலாம். சளி, இருமல் மற்றும் தொண்டை சம்பந்தமான நோய்களுக்கும் அருமந்தாக இருக்கும்
இஞ்சி
செரிமான சக்தியை அதிகரிக்கும் திறன் இஞ்சிக்கு உண்டு. இது குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுவதோடு, வளர்ச்சிதை மாற்றத்தையும் அதிகரித்து உடல் எடையை குறைத்து, கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். நோய் எதிர்ப்பு சக்தியையும் இது அதிகரிக்கும்.
பூண்டு
ப்ரீ பயோடிக் பண்புகள் நிறைந்த பூண்டு (Garlic), குடலுக்கு தேவையான ஆரோக்கியமான பாக்டீரியாவை அதிகரிக்க உதவுவதோடு, கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் பூண்டை உட்கொள்வதால், உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களும் நீங்கும்.
ஓமம்
ஜீரண கோளாறுகளுக்கு, ஓமம் அருமருந்தாகும். வாயு வயிற்றுப் பிடிப்பு, சிடி போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகள் அனைத்தையும் நீக்கும் சக்தி ஓமத்திற்கு உண்டு. ஓமத்திற்கு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் திறனும் உண்டு
புதினா
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை ஓட விரட்டும் திறன் புதினாவிற்கு உண்டு. வயிற்று வலி வாயு, ஆசிடிட்டி போன்ற அனைத்து அஜீரண பிரச்சனைகளுக்கும், புதினா நிவாரணம் அளிக்கும். புதினா நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்க உதவுவதோடு, கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மையும் கொண்டது. மேலும் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடிய புதினா, கோடை காலத்தில் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு.