Metabolism: உடல் பருமன் குறைய… வளர்சிதை மாற்றம் அதிகரிக்க செய்ய வேண்டியவை!
உடல் எடையை குறைப்பதில், கொழுப்பை எரிப்பதில் வளர்ச்சிதை மாற்றம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. வளர்ச்சிதை மாற்றம் என்னும் மெட்டபாலிசம் சிறப்பாக இல்லாவிட்டால், எடை இழப்பு என்பது சாத்தியப்படாது. அதோடு உடல் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்பட்டு, செரிமான பிரச்சனைகள் உட்பட பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.
வளர்ச்சிதை மாற்றம் என்றால் என்ன?
வளர்ச்சிதை மாற்றம் என்னும் மெட்டபாலிசம் என்பது, உடலில் நடைபெறும் ஒரு ரசாயன செயல்முறை. இது உடலுக்கு ஆற்றலை கொடுக்கிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து சத்துக்கள் மற்றும் குளுக்கோசை ஆற்றலாக மாற்றும் பணி வளர்ச்சிதை மாற்றத்தால் கட்டுப்படுத்தப்படும் பணியாகும். உடல் பருமனை குறைக்க (Weight Loss Tips)மட்டுமல்ல, நமது உடலின் உச்சி முதல் பாதம் வரையிலான செயல்பாடுகள் வளர்ச்சி மாற்றத்தை பொறுத்து அமைகிறது.
உடல் செயல்பாட்டில் வளர்ச்சிதை மாற்றத்தின் பங்கு
1. வளர்ச்சிதை மாற்றம் நமது உடல் இயக்கத் திறனுக்கு அடிப்படையாகிறது.
2. உடலில் உள்ள சேதமடைந்த செல்களை சீர் செய்கிறது.
3. உடலின் சுவாச செயல்பாட்டிற்கு உதவுகிறது.
4. உடலின் இரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது.
5. உணவை செரிமானம் செய்து ஆற்றலாக மாற்றுகிறது.
வளர்ச்சிதை மாற்றம் மந்தமானால் ஏற்படும் பாதிப்புகள்
உடல் பருமன்
வளர்ச்சிதை மாற்றம் மந்தமானால் ஏற்படும் பாதிப்புகளை முதன்மையானது உடல் பருமன். நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் உடல் எடை குறையாது. உடல் பருமன் அதிகரித்துக் கொண்டே இருக்கும். டயட் உடற்பயிற்சி என எதுவும் பலன் தராது. நீங்கள் கடுமையாக முயற்சி செய்தும், உடல் எடை கட்டுக்குள் வரவில்லை என்றால், உங்கள் வளர்ச்சிதை மாற்றம் என்னும் மெட்டபாலிசம் மந்தமாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
சோர்வு
மந்தமான வளர்ச்சி மாற்றம் காரணமாக, கலோரிகள் சரியாக எரிக்கப்படாமல், எப்போதும் சோர்வாகவும் சோம்பலாகவும் இருக்கும். மிகவும் பலவீனமான உணர்வு ஏற்படும். இதனால் உடலின் செயல் திறன் பெரிதும் பாதிக்கப்படும்.
வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்ய வேண்டியவை?
வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் ஆவது குடிக்க வேண்டும்.
சோடா பானங்கள்
சோடா சேர்த்த பானங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை பெரிதும் பாதித்து, உடல் ஆரோக்கியத்தை கெடுத்து விடும். மேலும் இதனால் உடலின் சர்க்கரை அளவும் அதிகரிக்கும். எலும்புகளின் ஆரோக்கியமும் சோடா பானங்களால் பாதிக்கப்படும். இதனால் இவற்றை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.
புரதம் நிறைந்த உணவுகள்
புரதம் நிறைந்த உணவுகள், வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டி, எடை இழப்பிற்கு உதவும். தசைகள் உருவாகும் புரதம் முக்கியம். அதிக தசைகள் இருந்தால் அதிக கலோரிகள் எரிக்கப்படும். வளர்ச்சிதை மாற்றம் என்னும் மெட்டபாலிசம் சிறப்பாக இருக்கும்.
வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் உணவுகள்
வளர்ச்சியை மாற்றும் நன்றாக இருக்க குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், உணவுகள் அவசியம். குடலில் நல்ல பாக்டீரியாக்கள் அளவு அதிகரித்தால், உணர்ச்சியை மாற்றும் சிறப்பாக இருக்கும். இதற்கு ப்ரோ பயோடிக் உணவுகள் பெரிதும் உதவும். அதோடு, சீரகம், இஞ்சி, ஓமம் போன்ற மசாலாக்கள் வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டி உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உதவுகின்றன.
உடற்பயிற்சி
வளர்ச்சி மாற்றம் சிறப்பாக இருக்க உடற்பயிற்சியும் அவசியம். உடற்பயிற்சியின் மூலம் தசைகள் உருவாகி, அதிக கல்லூரிகள் எரிக்கப்பட்டு உணர்ச்சிதை மாற்றம் சிறப்பாக இருக்கும்.