Neem & Turmeric: நோய்களை விரட்டும் வேப்பிலை – மஞ்சள் கூட்டணி…!
வேப்பிலை, மஞ்சள் இரண்டுமே பல வகையான உடல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவும் என்பதௌ அனைவரும் அறிந்தது தான். ஆனால், வேப்பிலையும் மஞ்சளும் சேரும் போது கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.
மஞ்சளில் குர்குமின் என்ற அற்புத ரசாயனம் உள்ளது. மேலும் இதில் கால்ஷியம் இரும்புச்சத்து, வைட்டமின் சி, ஈ ஆகியவை நிறைந்துள்ளன. வேப்பிலையில், ஆன்ட்டி செப்டிக் மற்றும் ஆன்ட்டி பாக்டீரியல் நன்மைகளும் நீரிழிவு நோயை எதிர்ப்பும் பண்புகளும் அடங்கியுள்ளன.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேப்பிலை மஞ்சள் கலவை பெரிதும் உதவும். இவற்றின் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை, ஆக்சிஜனேற்ற பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
வயிறு தொடர்பான பிரச்சனைகளை அனைத்தும், மஞ்சள் வேப்பிலை கூட்டணி நீக்கும். இதனால், ஜீரண சக்தி வலுவாகி, செரிமானம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
வேப்பிலை மஞ்சள் கூட்டணி சிறந்த டீடாக்ஸ் பானம். உடலில் சேர்ந்துள்ள நச்சுக்கள் அனைத்தையும் நீக்கி, ரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் பெற்றது.
சருமத்தை ஆரோக்கியமாக இருக்க, தொற்றுக்கள் இருந்து விடுபட, வேப்பிலை மஞ்சள் கலவை அருமருந்து. வேப்பிலை மஞ்சள் சேர்த்து அரைத்து சருமத்தில் பூசினால், சரும தொற்று உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளில் இருந்தும். விடுபடலாம்.
தண்ணீரில் வேப்பிலை கிள்ளி போட்டு, அதில் மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து அருந்தலாம். கசப்பு சுவை பிடிக்கும் என்பவர்கள். வேப்பிலையும் மஞ்சளும் சேர்த்து அரைத்து. ஒரு சிறிய உருண்டை எடுத்துக் கொள்ளலாம். சருமத்திற்கு பயன்படுத்தும் போது, இரண்டையும் சேர்த்து அரைத்து பூசிக்கொள்ளலாம். வேப்பிலை மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்த நீரில் குளிப்பதும் பயன் தரும்.