பைக் வாங்குற பிளானா? பஜாஜ் vs ஹீரோ vs டிவிஎஸ் பைக் ஒப்பீடு.. இதைப்படிங்க முதல்ல!

சமீப காலமாக இந்திய வாடிக்கையாளர்கள் குறிப்பாக இளைஞர்கள் 100cc அல்லது 110cc எஞ்சின்கள் கொண்ட என்ட்ரி-லெவல் பைக்குகளுக்கு பதிலாக, அதிக கெப்பாசிட்டி எஞ்சின்கள் கொண்ட மோட்டார் சைக்கிள் மாடல்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் 125cc எஞ்சினை கொண்ட மாடல்கள் மீது பலரும் கவனம் செலுத்துகிறார்கள். மக்களின் ஆர்வத்திற்கு ஏற்பவும், தங்களின் விற்பனையை அதிகரிக்கவும் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களும் 125cc, 160cc மற்றும் 200cc மோட்டார் சைக்கிள்களை முன்பை விட அதிகம் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.

நாட்டில் விற்கப்பட்டு வரும் பிரீமியம் மோட்டார் சைக்கிள் செக்மென்ட்டில் பஜாஜ் ஆட்டோ முக்கிய பங்கு வகிக்கிறது சமீபத்தில் கூட இந்த நிறுவனம் அதன் அப்டேட் செய்யப்பட்ட பல்சர் என்எஸ் சீரிஸ் மாடல்களை அறிமுகப்படுத்தியது. சில நாட்களுக்கு முன் Pulsar NS160 மற்றும் Pulsar NS200 உள்ளிட்ட தயாரிப்புகளுடன் Pulsar NS125-ன் அப்டேட்டட் வெர்ஷனை இந்தியாவில் பஜாஜ் அறிமுகப்படுத்தியது.

இந்த புதிய மாடல் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் மற்றும் டிவிஎஸ் ரைடர் 125 போன்ற மோட்டார் சைக்கிள்களுடன் போட்டியிடுகிறது. பஜாஜ் நிறுவனத்தின் Pulsar NS125, ஹீரோவின் Xtreme 125R மற்றும் டிவிஎஸ் நிறுவனத்தின் Raider 125 ஆகிய பைக்குகளின் விலை மற்றும் ஸ்பெசிஃபிகேஷன்கள் அடிப்படையிலான ஒப்பீட்டை இங்கே பார்க்கலாம்.

பல்சர் என்எஸ்125 vs எக்ஸ்ட்ரீம் 125ஆர் vs ரைடர் 125 – விலை ஒப்பீடு:

பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் என்எஸ்125 பைக்கின் அப்டேட்டட் வெர்ஷன் ரூ.1.05 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வருகிறது. அதே நேரம் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர்-ன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.95,000 முதல் ரூ.99,500 வரை இருக்கிறது. அதே நேரம் டிவிஎஸ் நிறுவனத்தின் Raider 125 பைக்கானது ரூ.95,219 மற்றும் ரூ.1.03 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வருகிறது. இந்த 3 தயாரிப்புகளில் Xtreme 125R மிகவும் மலிவான மாடலாகவும், Pulsar NS125 விலையுயர்ந்த மாடலாகவும் உள்ளது.

பல்சர் என்எஸ்125 vs எக்ஸ்ட்ரீம் 125ஆர் vs ரைடர் 125 – ஸ்பெசிஃபிகேஷன்கள் ஒப்பீடு:

பஜாஜ் நிறுவனத்தின் Pulsar NS125 பைக்கானது 125 cc DTS-i எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது 5-ஸ்பீட் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகப்பட்சமாக 11.83 பிஎச்பி பவர், 11 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

ஹீரோ நிறுவனத்தின் Xtreme 125R பைக்கானது 125 சிசி சிங்கிள்-சிலிண்டர் எஞ்சினை கொண்டுள்ளது. இது 5 ஸ்பீட் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 8,250 ஆர்பிஎம்மில் 11.4 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 10.5 என்எம் பீக் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

டிவிஎஸ் நிறுவனத்தின் Raider 125 பைக்கானது 124.8சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர் மற்றும் ஆயில்-கூல்டு எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 7,500 ஆர்பிஎம்மில் 11.22 பிஎச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 11.2 என்எம் பீக் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. மேற்கண்ட விவரங்களின்படி மூன்று மோட்டார் சைக்கிள்களில் பார்த்தால் பஜாஜ் பல்சர் என்எஸ்200 அதிக பவர் அவுட்புட்டை உருவாக்குகிறது, அதே நேரத்தில் TVS ரைடர் 125 அதிக டார்க் வெளியீட்டைக் கொண்டுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *