இந்திய நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள விமர்சனம்
இந்தியாவில் ஏழு கட்ட நாடாளுமன்றத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகளால் விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன
இந்த ஏழு கட்ட வாக்குப்பதிவு பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இது குறித்து கருத்துரைத்துள்ள காங்கிரஸின் தலைவர் கார்கே, ஜூன் 4ஆம் திகதி வரையில் பெரும்பாலும் அரசப்பணிகள் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
வழங்கப்பட்டுள்ள ஆலோசனை
எனவே, இதற்கு பதிலாக 4 கட்டங்களில் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று ஆலோசனை வெளியிட்டுள்ளார்.
மேலும், கார்கேயை தவிர, சிவ சேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரேயும் 7 கட்ட தேர்தல்களை விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.