மாலைதீவு நாடாளுமன்ற தேர்தல்: இலங்கை உள்ளிட்ட பிற நாடுகளில் வாக்குச்சாவடிகள்
மாலைதீவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் இந்தியா, இலங்கை மற்றும் மலேசியாவில் வைக்கப்படவுள்ளன.
சுமார் 11,000 மாலைதீவியர்கள் தங்கள் வாக்குச் சாவடிகளை இடமாற்றம் செய்யுமாறு மறுபதிவு கோரிக்கைகளை சமர்ப்பித்ததை அடுத்து, நாட்டின் தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்ததாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குச்சாவடிகளை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கான ஆறு நாள் கால அவகாசம் சனிக்கிழமையுடன் காலாவதியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பை மேற்கோள் காட்டி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
150 பேர் வாக்களிக்க மறுபதிவு
இதன்படி வாக்குப்பெட்டிகள், கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரம், இலங்கையின் கொழும்பு மற்றும் மலேசியாவின் கோலாலம்பூர் ஆகிய மூன்று இடங்களிலும் குறைந்தது 150 பேர் வாக்களிக்க மறுபதிவு செய்த பிறகு வைக்கப்படும் என்று உயர் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
200 ஆண்டுகளுக்கு பின்னர் புடின் படைத்த சாதனை 200 ஆண்டுகளுக்கு பின்னர் புடின் படைத்த சாதனை கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் “முன்பு போல், இலங்கையிலும் மலேசியாவிலும் போதுமான மக்கள் பதிவுசெய்துள்ளனர்.
இந்தியாவில் திருவனந்தபுரத்தில் 150 பேர் பதிவு செய்திருப்பதால், அங்கு வாக்குப்பெட்டியை அமைக்க முடிவு செய்துள்ளோம்,” என்று தேர்தல் ஆணையத்தின் பொதுச்செயலாளர் ஹசன் ஜகாரியாவை மேற்கோள் காட்டி adadhu.com இணையத்தளம் தெரிவித்துள்ளது.
கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மீண்டும் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதை சுட்டிக்காட்டிய ஜகாரியா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தாய்லாந்தில் வாக்களிப்பு நடத்தப்படாது என்று கூறினார்.