போன் பே, கூகுள் பேவை ஓரந்தள்ளி வரும் ஜியோ பே.. ஜியோவின் மாஸ்டர் பிளான் இதுதான்!
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இளைஞர்களை தொடர்ந்து வாலிபர், முதியவர் என பலரும் பரிவர்த்தனையை தொடங்க ஆரம்பித்துவிட்டனர். சிறிய கடை முதல் பெரிய பெரிய மால் வரை தற்போது இந்த பரிவர்த்தனை ஊடுறுவியது என்றே சொல்லலாம்.
ரிசர்வ் வங்கி பேடிஎம்மிற்கு தடை சொல்லிவிட்டதால், தற்போது போன் பே, கூகுள் பே தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் மாபெரும் திட்டத்துடன் ஜியோ நிறுவனமும் கால்பதிக்கிறது.
பேடிஎம் சவுண்ட்பாக்ஸை போல ஜியோ நிறுவனமும் ஜியோ சவுண்ட்பாக்ஸை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக சில்லறை கடைகளை இலக்காக கொண்டு ஜியோ சவுண்ட்பாக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
தற்போதுள்ள ஜியோ பே செயலியுடன் சவுண்ட்பாக்ஸ் தொழில்நுட்பத்தை இணைக்கும் பணிகளை ஜியோ மேற்கொண்டிருக்கிறது. இதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ள ஜியோ நிறுவனம் பேடிம், போன்பே மற்றும் கூகுள் பே நிறுவனங்களுக்கு சவால் கொடுக்கும் வகையிலான திட்டத்துடன் களமிறங்குவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.